TA/Prabhupada 0066 - கிருஷ்ணரின் எதிர்பார்ப்பை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்



Lecture on BG 16.4 -- Hawaii, January 30, 1975

இப்பொழுது நமது கையில் தான் இருக்கிறது, கிருஷ்ணருடைய பக்தர்கள் ஆவதும் அல்லது தீய என்ணங்கள் கொண்ட மனிதர்களாகவே இருப்பதும் நமது கையில் தான் உள்ளது. கிருஷ்ணர் சொல்கிறார், 'உன்னுடய இவுலக தீய தொடர்புகளை துறந்து என்னிடம் சராணாகதி அடைந்து விடு " என்று அதுவே கிருஷ்ணருடைய விருப்பம். ஆனால், நீங்கள் ஒருவேளை கிருஷ்ணருடைய விருப்பத்தை ஏற்று கொள்ளவில்லை எனில், உங்களுடைய சொந்த ஆசைகளை நீங்கள் அனுபவிக்க எண்ணினால் அப்போதும் கூட, கிருஷ்ணர் சந்தோஷப்படுவர். உங்களுக்கு தேவையானவற்றை தருவார். ஆனால், அது மிக சிறந்தது அல்ல. கிருஷ்ணருடைய விருப்பங்களை நாம் ஏற்று கொள்ள வேண்டும். நமது தீய ஆசைகள் வளருவதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க கூடாது அதுவே தவம் எனப்படும். நமது ஆசைகளை துறக்க வேண்டும். அதுவே தியாகம் எனப்படும். கிருஷ்ணருடைய விருப்பங்களை மட்டுமே நாம் ஏற்று கொள்ள வேண்டும். இதுவே பகவத் கீதயின் சாராம்சம் ஆகும். அர்ஜுனனின் நோக்கம் யுத்தம் செய்வதல்ல ஆனால் அதற்கு நேர்மாறாக,பகவான் கிருஷ்ணருடைய விருப்பம் யுத்தம் செய்வதே .முடிவாக, அர்ஜுநன் கிருஷ்ணருடைய விருப்பதிற்கு இணங்கினான். சரி. நான் உங்களது விருப்த்திற்க்குயேற்ப நடக்கிறேன். இதுதான் பக்தி. பக்திக்கும் கார்மாவிற்க்கும் உள்ள வேறுபாடு இதுவே கர்மா என்பது எனது ஆசைகளை நிறைவேற்றி கொள்வது. மாற்றாக, பக்தி என்பது பகவான் கிருஷ்ணருடைய விருப்பங்களை நிறைவேற்றுவது. இதுவே இரண்டுக்கும் உள்ள வேறுபாடு. இப்பொழுது நீங்களே தேர்வு செய்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் ஆசைகளை நிறைவேற்றி கொள்ள வேண்டுமா அல்லது பகவான் கிருஷ்ணருடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமா என்று. பகவான் கிருஷ்ணருடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்று முடிவு செய்தீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். அதுவே நமது கிருஷ்ணர் நினைவான வாழ்வு. கிருஷ்ணர் அதையே விரும்புகிறார். நான் அதை நிச்சயம் செய்வேன். எனக்காக எதையும் செய்துகொள்ள மாட்டேன். அதுதான் விருந்தவனா. விருந்தாவானவில் இருக்கும் ஒவ்வொரு உயிரினமும் கிருஷ்ணருடைய விருப்பங்களை நிறைவேற்ற மட்டுமே முயற்சி செய்கின்றன. மாடு மேய்க்கும் சிறுவன், மாடு, மரம், செடி, பூ, நீர், பெண்கள், வயதான உயிரினங்கள், தாய் யசோதா, நந்தா.. இப்படி அவர்கள் அனைவருமே கிருஷ்ணருடைய விருப்பங்களை நிறைவேற்றுவத்திலேயே தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். அதுதான் விருந்தவனா. ஆகவே , நீங்களும் இந்த பொருள் சார்ந்த உலகத்தை விருந்தாவனமாக மாற்றலாம், உங்களின் எண்ணம் கிருஷ்ணருடைய விருப்பங்களை நிறைவேற்ற சம்மதிக்கும் பட்சத்தில்.. அதுதான் விருந்தவனா. உங்களின் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள நினைக்கும் பட்சத்தில், அது பொருள் சார்ந்த விஷயம் ஆகிவிடும். இதுவே ஆன்மிகத்திற்க்கும் மற்றும் லௌகீக உலகத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு.