TA/Prabhupada 0067 - கோஸ்வாமீக்கள் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கி பழக்கப்பட்டவர்கள்



Lecture on SB 1.16.26-30 -- Hawaii, January 23, 1974

ஆகையால் எதுவாயினும் கிருஷ்ணர் பக்தி இயக்கம் முன்னோக்கிப் போவதற்கு, காரணம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் பெருந்தன்மையான கருணை இந்த கலி-யுகத்தில் துன்பப்படும் ஏழை மக்களுக்காக. இல்லையென்றால், கிருஷ்ணர் உணர்வு பெறுவது எளிதானதல்ல, எளிதானதல்ல. ஆகையால் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் கருணையால் கிருஷ்ணர் உணர்வை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை பெற்றவர்கள், அவர்கள் அந்த சந்தர்ப்பத்தை இழந்துவிடக் கூடாது. அது தற்கொலைக்கு சமமாகும். சரிந்து விழுந்துவிடாதீர்கள். அது மிக எளிது. வெறுமனே ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருப்பதால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சிபார்சு செய்தாலும், இருபத்தி நான்கு மணி நேரம், எப்பொழுதும் அல்ல, கீர்தநீய: சதா ஹரி: (ஸி.ஸி.ஆதி 17.31), எப்பொழுதும் ஜபித்தல். அதுதான் கொள்கை. ஆனால் நம்மால் அதை செய்ய முடியாது, ஏனென்றால் நாம் கலியுகத்தின் தாக்கத்தால் வெற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறோம். ஆகையால் குறைந்தது பதினாறு சுற்று. இதை தவற விடாதீர்கள். இதை தவற விடாதீர்கள். இதில் சிரமம் என்ன, பதினாறு சுற்றுக்கள்? அதிகபட்சம் இரண்டு மணி நேரம் எடுக்கும். உங்களுக்கு இருபத்தி நான்கு மணி நேரங்கள் இருக்கின்றன. நீங்கள் தூங்க வேண்டுமா; சரி, தூங்குங்கள், பத்து மணி நேரங்கள் தூக்கம். அது பரிந்துரை செய்யப்படவில்லை. ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்கக் கூடாது. ஆனால் அவர்கள் தூங்க விரும்புகிறார்கள். அவர்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் தூங்க விரும்புகிறார்கள். கலியுகத்தில் அதுதான் அவர்களுடைய விருப்பம். ஆனால், இல்லை. பிறகு நீங்கள் நேரத்தை வீண்ணடித்துக் கொண்டிருப்பீர்கள். சாப்பாட்டை, தூக்கத்தை, உடலுறவு கொள்வதை மற்றும் தற்காத்தலை குறைத்துக் கொள்ளுங்கள். ஒன்றும் இல்லையெனில் அது குறைவற்றது. ஏனென்றால் இவைகள் உடல் சார்ந்த தேவைகள். சாப்பிடுவது, தூங்குவது, உடலுறவு கொள்வது, தற்காத்துக் கொள்வது அது உடல் சார்ந்த தேவைகள். ஆனால் நான் இந்த உடல் அல்ல. தேஹினோ 'ஸ்மின்யதா தேஹே கெளமாரம (ப.கீ.2.13). ஆகையால் அந்த மெய்ஞ்ஞானம் காலம் பிடிக்கும். ஆனால் நாம் உண்மையிலேயே கிருஷ்ணர் உணர்வில் முன்னேற்றமடைந்துக் கொண்டிருக்கும் பொழுது, நமக்கு நம் கடமை தெரிந்திருக்க வேண்டும். ஆறு மணி நேரத்திற்கு மேல் தூங்கக் கூடாது. அதிகபட்சமாக எட்டு மணி நேரம். அதிகபட்சமாக கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு. ஆனால் பத்து மணி நேரம், பன்னிரெண்டு மணி நேரம், பதினைந்து மணி நேரம், கூடாது. பிறகு என்ன பயன்? யாரோ ஒருவர் ஒரு உயர்ந்த பக்தரைக் காணச் சென்றார், ஒன்பது மணிக்கு அவர் தூங்கிக் கொண்டிருந்தார். மேலும் அவர் உயர்ந்த பக்தர். இல்லையா? ஆகையால் அது என்ன? அவர் எம்மாதிரியான பக்தர்? பக்தர்கள் விடியல் காலை நான்கு மணிக்கெல்லாம், எழுந்திருக்க வேண்டும். ஐந்து மணிக்குள், குளித்துவிட்டு மற்ற வேலைகளையும் முடித்திருக்க வேண்டும். பிறகு அவர் ஜபிக்க தொடங்க வேண்டும் இன்னும் மற்ற பல. இருபத்தி நான்கு மணிநேர உழைப்பு அங்கு இருக்க வேண்டும். ஆகையால் தூங்குவது நல்லதல்ல. கோஸ்வாமீக்கள் இரண்டு மணி நேரம் மட்டும் தூங்கி பழக்கப்பட்டவர்கள். நானும் இரவில் புத்தகங்கள் எழுதுவேன், மேலும் தூங்குவேன், மூன்று மணி நேரத்திற்கு மேல் அல்ல. நான் சில நேரத்தில் கொஞ்சம் கூட தூங்குவேன், அவர்கள் போல் அல்ல. நான் கோஸ்வாமீக்களைப் போல் பாவனை செய்ய மாட்டேன். அது சாத்தியமல்ல. ஆனால் கூடுமானவரை, எல்லோரும் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். மேலும் தூக்கத்தை தவிர்த்தல் என்றால், நாம் குறைவாக உண்டால், பிறகு நம்மால் தவிர்க்கலாம். சாப்பிடுவது, தூங்குவது. சாப்பாட்டிற்குப் பின், அங்கே தூக்கம் இருக்கிறது. ஆகையால் நாம் அதிகமாக சாப்பிட்டால், பிறகு அதிக தூக்கம். நாம் குறைவாக சாப்பிட்டால், பிறகு குறைந்த தூக்கம். சாப்பிடுவது, தூங்குவது, உடலுறவு கொள்வது. மேலும் உடலுறவு கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். அதுதான் மிக கடுமையான விமர்சனம். உடலுறவு கூடுமானவரை குறைக்கப்பட வேண்டும். ஆகையால் நமக்கு இந்த கட்டுப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது, "புறக்கணிக்கப்பட்ட உடலுறவு கூடாது," உடலுறவு வாழ்க்கை, நாம் கூறவில்லை, "அதாவது நீங்கள் ஈடுபட கூடாது என்று." ஒருவராலும் இருக்க முடியாது. ஆகையினால் உடலுறவு வாழ்க்கை என்றால் திருமண வாழ்க்கை, கொஞ்சம் சலுகை. ஓர் உரிமம், "சரி, நீங்கள் இந்த உரிமம் பெற்றுக் கொள்ளுங்கள்." ஆனால் புறக்கணிக்கப்பட்ட உடலுறவு அல்ல. பிறகு உங்களால் ஒன்றும் முடியாது. ஆகையால் சாப்பிடுவது, தூங்குவது, உடலுறவு கொள்வது மேலும் தற்காத்துக் கொள்வது. அத்துடன் தற்காத்துக் கொண்டு, நாம் பல வழிகளில் தற்காத்துக் கொண்டிருக்கிறாோம், இருப்பினும், போர் அங்கே நடக்கிறது, மேலும் ஜட இயற்கையின் மோதல், உங்கள் நாடு திறமையாக தற்காத்துக் கொள்கிறது, ஆனால் இப்பொழுது பெட்ரோல் பறிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் தற்காத்துக் கொள்ள முடியாது. அதேபோல், அனைத்தும் எந்த நேரத்திலும் பறிக்கப்படலாம். ஆகையால் தற்காப்பிற்கு கிருஷ்ணரை நாடிச் செல்லுங்கள், பாதுகாப்பு. அவஸ்ய ரக்ஸிபே கிருஷ்ணா. இதுதான் சரண் அடைதல் என்கின்றோம். சரணடைதல் என்றால், கிருஷ்ணர் சொல்கிறார், அதாவது "நீங்கள் என்னிடம் சரணடையுங்கள்," ஸர்வ தர்மான்பரித்யஜ்ய (ப.கீ. 18.66). நாம் இதை நம்புவோம், அதாவது "கிருஷ்ணர் சரணடைய சொல்கிறார். நான் சரணடைகிறேன். ஆபத்தில் அவர் என்னை பாதுகாக்க வேண்டும்." அதைத்தான் சரணடைதல் என்று அழைக்கிறோம்.