TA/Prabhupada 0082 - கிருஷ்ணர் எங்கும் நிறைந்திருக்கிறார்



Lecture on BG 4.24 -- August 4, 1976, New Mayapur (French farm)

பக்தர்: கிருஷ்ணா தெய்வீக நிலைக்குள்ளும், உயிர் வாழுவன இதயத்திலும் இருப்பதாக சொல்கிறோம். பிரபுபத: கிருஷ்ணா எல்லா இடத்திலும் இருக்கிறார். பக்தர்: மனிதரகவா அல்லது சக்தி வடிவிலா? பிரபுபத: சக்தி வடிவில். மனித வடிவாகவும் இருக்கிறார். நமது இந்த விழிகளை கொண்டு அவரை பார்க்க முடியாது. ஆனால் சக்தியை நாம் உணர முடியும். மேலும் மேலும் இந்த கூற்றை தெளிவு படுத்த வேண்டும். இதை நாம் முழுமையாக உணரும்பொழுது, அனைத்துமே பிரஹ்மா என்ற கூற்று. சர்வம் கால்வ் இடம் பிரஹ்மா. முழுமையான பக்தன் கிருஷ்னாவை தவிர வேறு எதையும் பார்க்க மாட்டார். பக்தன்: ஸ்ரில பிரபுபத, தெய்வீக சக்திக்கும், உலகியல் சக்திக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா? பிரபுபத: ஆமாம். வேறுபாடு. நிறைய வேறுபாடுகள் உண்டு. உதாரணம், மின்சாரம். நிறைய பொருட்கள் வேலை செய்கின்றன, சக்தியின் வேறுபட்டால். மின்சாரத்தினால் தொலைபேசி கூட வேலை செய்கிறது. அதே மின்சார சக்தியை பயன்படுத்தி. ஆகவே கிருஷ்ணர் சொல்கிறார், ஆஹாṁ சர்வச்ய பிராபவḥ (ப்க் 10.8). அவரே அனைத்திற்கும் ஆதி. பக்தன்: பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது போல, வாழும் காலத்தில் ஒருவர் தனது உடலை மாற்றி கொள்கிறார் என்று ஆனால், நாம் பார்க்கிறோம் கருப்பு மனிதன் ஒருபோதும் வெள்ளையாக மாறுவதில்லை. அல்லது எதாவது நிலையாக உள்ளதா? உடல் மாற்றம் ஏற்படும் பொழுது, ஏதாவது இந்த உடலில் நிலையாக உள்ளதா ? அது என்ன? இது எப்படி சாத்தியம்? உடல் மாறினாலும், சிறு வயதில் இருந்து மூப்பு வரை நாம் ஒருவரை அடையாளம் காண முடிகிறது. பிரபுபத: நீங்கள் அடுத்த நிலைக்கு செல்லும்போது கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திற்கு ஒரு வேறுபாடும் இல்லை என்பதை நீங்கள் பார்க்கலாம். ஒரு பூ மலருவதை போல, அதில் நிறைய வண்ணங்கள். அது ஒரே இடத்தில் இருந்து தான் வருகிறது ஆனாலும் எந்த வித்தியாசமும் இல்லை, ஆனால் அதை அழகு செய்வதற்கு நிறைய வண்ணங்கள். சூரிய ஒளியில் ஏழு வண்ணங்கள், அந்த ஏழு வண்ணங்களில் இருந்து பல விதமான வண்ணங்கள் உருவாகிறது. ஆனால் அடிப்படை நிறம் வெள்ளை மட்டுமே. அதிலிருந்து மிக அதிக வண்ணங்கள் வருகிறது. இது தெளிவாக புரிகிறதா? இல்லையா? பக்தன்: ஸ்ரில பிரபுபத, கிருஷ்ணர் தான் இவை அனைத்தையும் படைத்தார் என்றால், கிருஷ்ணாரின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு சமர்பிக்க பட்டது என்றால், நன்மை எது தீமை எது என்று நம்மால் நிச்சயமாக சொல்லமுடியுமா? பிரபுபத: நன்மை அல்லது தீமை என்ற ஒன்று கிடையாது. இவையனைத்தும் நமது மனத்தின் கட்டு கதை ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால், பொருள் சார்ந்த அனைத்து உலகியல் விஷயங்களும் தீமையானதே.