TA/Prabhupada 0083 - ஹரே கிருஷ்ணா ஜேபியுங்கள் பிறகு அனைத்தும் வந்து சேரும்



Lecture on SB 7.9.11-13 -- Hawaii, March 24, 1969

ப்ரகலத மஹாராஜ் சொல்கிறார் - இந்த விஷயத்தை பற்றி நாம் முன்பே விவாதித்து விட்டோம் அதற்கு எந்த தகுதி முறையும் தேவைில்லை என்று. பகவானை அமைதிப்படுத்த, சந்தோஷப்டுத்த அல்லது திருப்தி படுத்த, உங்களுக்கு எந்த ஒரு முன் தகுதியும் தேவை இல்லை. ஓ, நீங்கள் உங்களுடைய பல்கலைக்கழக தேர்வுகளில் தேர்ச்சி அடைந்தோ, அல்லது, ராகெஃபெல்லர், ஃபோர்ட் போன்ற செல்வந்தர்கள் போலவோ, அல்லது இதை போல அல்லது அதைப்போல இருக்கவேண்டும் என்றோ ஒரு கட்டாயமும் இல்லை. அஹைதூக்கி அப்பிராதிஹாத்ā கிருஷ்ணாரின் மேல் நீங்கள் அன்பு செலுத்த விரும்பினால்,அதற்கு ஒரு தடையும் இல்லை.அதற்கு ஒரு தடையும் இல்லை. வழி திறந்தே இருக்கிறது. வெறுமனே நீங்கள் உண்மையாக இருப்பதே.. அவ்வளவுதான். கிருஷ்ணர் உங்களுக்கு வழிவிடுவார். ஒருவேளை உண்மையில்லாமல் இருந்தால், கிருஷ்ண மாயா அங்கு இருக்கிறது. அவர் எப்பொழுதுமே ஒரு தடையை உண்டு பண்ணிவிடுவார். இது அல்ல.. அது அல்ல... ஆகவே, ப்ரகலத மஹாராஜ் இப்படித்தான் முடிவு செய்கிறார். " நான் சிறு குழந்தையாக இருந்தாலும், நான் படிக்காதவன், வேதங்களை பற்றி அறியாதவன், கடவுள் கொள்கையற்ற ஒருவருக்கு கீழ் குடியில் மகனாக பிறந்தவன். ஆகவே, அனைத்து கெட்ட தகுதிகளையும் கொண்டவன். ஆனால், கடவுளை மிக பக்தி மற்றும் அறிவு மிகுந்த மனிதர்களால் வழிபடுகிறார்கள். மிக உயரிய பண்புமிக்க பிராமணர்கள் வேத மந்திரங்கள் முழங்கி வணங்குகிறார்கள். அதை போன்ற தகுதி என்னிடம் இல்லை. இருந்த போதிலும், மிக உயரிய நிலையில் உள்ள தேவதைகள் என்னிடம் விண்ணப்பம் செய்தனர் அப்படியென்றால், கடவுளை திருப்தி படுத்த என்னாலும் முடியும். அப்படி இல்லையென்றால், அவர்கள் எப்படி பரிந்துறைப்பார்கள். ஆகவே, நான் பெற்றிருக்கும் தகுதி, அறிவு இவற்றை கிருஷ்ணருக்கு சமர்ப்பணம் செய்வேன். ஆகவே, நமது கிருஷ்ண பக்தி இயக்கம் இதை போன்றதே. நீங்கள் என்ன தகுதி பெற்று இருந்தாலும் அதுவே போதுமானது. நீங்கள் அந்த தகுதியை கொண்டே தொடங்கலாம். நீங்கள் உங்களிடம் இருக்கும் அந்த தகுதியை கொண்டே கிருஷ்ணருக்கு சேவை செயுங்கள். ஏனென்றால், உண்மையான தகுதி என்பது நீங்கள் சேவை செய்ய எண்ணுவதே. அதுவே உண்மையான தகுதி. ஆகவே, நீங்கள் அந்த எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களின் அழகு, செல்வம் அல்லது அறிவு போன்ற வெளிப்புற தகுதிகளை அல்ல. அதற்கு எந்த மதிப்பும் இல்லை. கிருஷ்ணருகான சேவையில் உங்களை இணைத்து கொண்டால் மட்டுமே அதற்கு மதிப்பு உண்டு. நீங்கள் பெரிய செல்வந்தாராய் இருந்தால், உங்களுடைய செல்வங்களை கிருஷ்ண சேவைக்காக பயன்படுத்தினால்,.. அது சரி. ஆனால் அதற்காக நீங்கள் செல்வந்தராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதன் பிறகு தான் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும் என்பதும் இல்லை. ப்ரகலத மகராஜ் சொல்கிறார், ன்īகோ ஆஜய்ā குṇஅ-விசாற்ககம் அனுப்புரவிṣṭஅḥ ப்ūஏத்த என பூம்āன் அனுவர்ṇஈடென. ப்ராலத ஒரு தூய்மையற்ற தகப்பனுக்கு மகனாக பிறந்து இருக்கிறாரே என்று உங்களில் யாராவது வினவலாம், அது ஒரு விவாத பேச்சு. ப்ராலத ஒரு தூய்மையற்றவர் அல்ல. ஆனால் அது ஒரு விவாத பேச்சுக்கு மட்டுமே உகந்தது. கீழ் குடியில் ஒரு தகுதி இல்லாத தகப்பனுக்கு மகனாக பிறந்து....இப்படி பல மாதிரியான விஷயங்களை அவர்கள் சொல்லலாம். ஆனால், ப்ராலத சொல்லுவதாவது, நான் பெருமானை போற்ற தொடங்கினேன் என்றால், நானும் தூய்மை அடைந்து விடுவேன். நான் தூய்மையான மந்திரத்தை ஜெபம் செய்தால்.... ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் தூய்மை அடைவதற்கான வழிமுறை.. நான் என்னை தூய்மை படுத்திக்கொண்ட பின்புதான் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்கள் ஜெபம் செய்ய தொடங்கலாம். அது பின் தூய்மை அடையும். நீங்களும் தூய்மை படுத்த பாடுவீர்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் ஜெபம் செய்ய தொடங்குங்கள். உங்களின் நிலை ஒரு முக்கியமான விஷயம் இல்லை. உண்மையில், என்னுடைய இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை நான் தொடங்கியது.. அவர்கள் முழு தூய்மையான நிலையில் வந்தார்கள் என்பது இல்லை. அதாவது நாம், என்னிடம் வந்த உங்களில் ஒவ்வொருவரும் அவர்களின் குழந்தை பருவ பழக்க வழக்கங்கள், இந்திய வளர்ப்பு முறையில், அவர்களுக்கு சுகாதார கோட்பாடுகள் எதுவும் தெரியாது. தூய்மை என்பது பற்றிய கேள்வி என்ன? இந்தியாவில் குழந்தை பருவத்திலேயே முறைகள் உண்டு. குழந்தை பால் துலக்கவும், குளிப்பதற்கும் பயிற்றுவிக்க படுகிறது. எனக்கு நினைவு இருக்கிறது.. என்னுடைய மகனுக்கு நான்கு வயதாக இருக்கும் பொழுது, காலை சிற்றுண்டி முன், "உன் பற்கள் காட்டு" என்று கேட்பேன். அவனும் வாயை திறந்து காட்டுவான். சரி, நீ பல் துலக்கி உள்ளாய். நன்று. நீ இப்பொழுது காலை உணவு சாப்பிடலாம்." அங்கே பயிற்சிகள் உண்டு. ஆனால், இந்த நாட்டில், இந்த விதமான பயிற்சிகள்... நிச்சயமாக ஆங்காங்கே இருக்கிறது.. ஆனாலும் கடுமையானதாக இல்லை. ஆனாலும் அது ஒரு பெரிய விஷயம் இல்லை. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை தொடங்கி ஜெபம் செய்வோம். பிறகு, அனைத்தும் வரும். அனைத்தும் வரும்.