TA/Prabhupada 0110 - முன்னோர்களான ஆச்சார்யர்களின் கைப்பாவையாகுங்கள்



Morning Walk -- April 19, 1973, Los Angeles

ஸ்வரூப தாமோதர: அவர்கள் ஸ்ரீமத்-பாகவதத்தைக் கேட்டால், பிறகு அவர்களுடைய மனம் மாறிவிடும்.

பிரபுபாதர்: நிச்சயமாக. நேற்று, யாரோ நம் மாணவர்களிடம் நன்றி தெரிவித்தனர்

அதாவது: "ஓ, நாங்கள் உங்களுக்கு கடமை பட்டுள்ளோம், நீங்கள் பாகவதத்தை கொடுத்திருக்கிறீர்கள்." யாரோ சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?

பக்தர்கள்: ஆம், ஆம். த்ரிபுராரி அதை கூறினார். த்ரிபுராரி.

பிரபுபாதர்: ஓ த்ரிபுராரி ஆமாம். யாரோ அவ்வாறு சொன்னார்?

த்ரிபுராரி: ஆம் இரண்டு சிறுவர்கள் நேற்று விமான நிலையத்தில், இரண்டு பகுதிகளாக ஸ்ரீமத் பாகவதத்தை வாங்கினார்கள்.

ஜெயதீர்த: முழுமையாக?

த்ரிபுராரி: ஆறு காண்டம். அவர்கள் பாகவதத்தை ஏற்றுக் கொண்டு

கூறினார்கள்: "மிக்க நன்றி." பிறகு அதை அவர்களுடைய பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்தனர் மேலும் அவர்களுடைய விமானத்திற்காக காத்திருக்கும் வேளையில் ஒவ்வொருவரும் முதலாம் காண்டத்தை வைத்திருந்தனர்.

பிரபுபாதர்: ஆம், எந்த நேர்மையான மனிதரும் நம்முடைய இந்த பிரச்சார இயக்கத்தின் கடமையை உணர்வார்கள். இந்த புத்தகங்களை விநியோகம் செய்வதன் மூலம், நீங்கள் கிருஷ்ணருக்கு ஒரு உயர்வான சேவை செய்கிறீர்கள். அவர் எல்லோரிடமும் சொல்ல விரும்புவதாவது: ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.69). அவர் வந்திருக்கிறார், ஆகையினால், அதே சேவை செய்துக் கொண்டிருக்கும் எவரும், அதாவது: "கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்," அவர் கிருஷ்ணரால் மிக நன்றாக அங்கீகரிக்கப்படுகிறார். அது பகவத்-கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது: ந ச தஸ்மான் மனுஷ்யேஷூ (பகவத் கீதை 18.69). மனித சமுதாயத்தில், சமயச் சொற்பொழிவாற்றும் ஒருவரைவிட அன்புக்குரியவர் ஒருவருமில்லை. ஹரே கிருஷ்ணா.

பிரமானந்த: நாங்கள் வெறுமனே உங்களுடைய கைப்பாவை, ஸ்ரீலா பிரபுபதா. நீங்கள்தான் எங்களுக்கு புத்தகங்களை கொடுக்கிறீர்கள்.

பிரபுபாதர்: இல்லை நாம் எல்லோரும் கிருஷ்ணரின் ஓரினப் பொருளின் கைப்பாவை. நானும் ஒரு கைப்பாவை. கைப்பாவை. இது சீடர் பரம்பரையாகும். நாம் கைப்பாவையகத்தான் ஆக வேண்டும். அவ்வளவுதான். நான் என் குரு மஹாராஜின் கைப்பாவை, நீங்கள் என் கைப்பாவையானால், பிறகு அதுதான் வெற்றி. நம் முன்னோர்களின் கைப்பாவையாக நாமாகும் போது நம் வெற்றி அங்கு தெரிகிறது. தான்தெர சரண செவி பக்தசனேவாச. பக்தர்களின் சமூகத்தில் வாழ்ந்து மேலும் முன்னோர்களான ஆச்சார்யர்களின் கைப்பாவையாகவும். இதுதான் வெற்றி. ஆகையால் நாம் அதை செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். கிருஷ்ணர் உணர்வு சமூகமும் முன்னோர்களை உபசரிப்பதும். அவ்வளவுதான். ஹரே நாம ஹரே நாம (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 17.21). மக்கள் வருவார்கள். மக்கள் நம் பிரச்சாரத்தை போற்றுவார்கள். அதற்கு சில காலம் பிடிக்கும். ஸ்வரூப தாமோதர: அவர்கள் தற்சமயம் இரண்டு வருடங்களுக்கு முன்னைவிட அதிகமாக போற்றுகிறார்கள். பிரபுபாதர்: ஆம், ஆம், ஸ்வரூப தாமோதர: உண்மையான தித்துவத்தை அவர்கள் புரிந்துக் கொள்ள தொடங்கிவிட்டார்கால்.