TA/Prabhupada 0111 - அறிவுரைகளை பின்பற்றுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பீர்கள்



Morning Walk -- February 3, 1975, Hawaii

பக்தர் (1): ஸ்ரீலா பிரபுபாத, ஒருவர் எங்கிருந்து தன்னுடைய அதிகாரத்தை பெறுகிறார்?

பிரபுபாதர்: குருதான் அதிகாரமுடையவர்.

பக்தர் (1): இல்லை, எனக்கு தெரியும். ஆனால் பக்தி தொண்டின் நான்கு ஒழுக்க நெறிகளையும், பதினாறு சுற்று ஜெபித்தலும் பின்பற்றுவதை தவிர்த்து அவருடைய நடவடிக்கைகளுக்கு. அவர் பல விதமான காரியங்களை பகலில் செய்கிறார். எடுத்துக்காட்டாக அவர் கோயிலில் வசிக்கவில்லை என்றால் எங்கிருந்து இந்த அதிகாரத்தை பெறுகிறார்.

பிரபுபாதர்: என் கருத்தில் கொண்டுவர முடியவில்லை. குருதான் அதிகாரி. நீங்கள் ஏற்றுக்கொண்டீர்கள்.

பாலி மர்தன: அனைத்திர்க்கும்.

ஜெயதீர்த: சொல்லப் போனால் எனக்கு வெளியே சில வேலைகள் இருக்கிறது, நான் வெளியே வசிக்கிறேன், ஆனால் நான் என் வருமானத்தில் ஐந்து விழுக்காடு கொடுப்பதில்லை. ஆகையால் நான் செய்யும் அந்த வேலை, உண்மையிலேயே குருவின் கீழ் அவர் அதிகாரத்திற்கு உட்பட்டதா?

பிரபுபாதர்: அப்படியென்றால் நீங்கள் குருவின் அறிவுரைகளை பின்பற்றுவதில்லை. அது தெளிவான உண்மை. ஜெயதீர்த: அப்படியென்றால் அனைத்து செயல்களும், பகல் நேரத்தில், செய்த வேலையும் நான் குருவின் அறிவுரையை பின்பற்றவில்லை என்பதாகுமா. அது அதிகார.பூர்வமற்ற செயல்.

பிரபுபாதர்: ஆம். நீங்கள் குருவின் அறிவுரையை பின்பற்றவில்லை என்றால், பிறகு நீங்கள் உடனடியாக வீழ்ச்சியடைவீர்கள். அதுதான் முறை. இல்லையெனில் நீங்கள் ஏன், யஸ்ய ப்ரசாதா பகவத்-ப்ரசாதொ என்று பாடுகிறீர்கள்? என்னுடைய கடமை என் குருவை திருப்திபடுத்துவது. இல்லையெனில் நான் எங்குமே இல்லை. ஆகையால் நீங்கள் எங்கும் இருக்க விரும்பவில்லை என்றால் , பிறகு நீங்கள் விரும்பியபடி கீழ்ப்படியாதீர்கள். ஆனால் உங்கள் நிலையில் உறுதியாக இருக்க வேண்டுமென்றால், நீங்கள் உங்கள் குருவின் அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பக்தர் (1): வெறுமனே உங்கள் புத்தகங்களை படிப்பதன் மூலம் உங்கள் அறிவுரைகளை எங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது.

பிரபுபாதர்: ஆம். எவ்வகையிலேனும், அறிவுரைகளை பின்பற்றுங்கள். அதுதான் தேவை. அறிவுரைகளை பின்பற்றுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. நீங்கள் பாதுகாப்பாக இருப்பீர்கள். அறிவுரைகளை பின்பற்றுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பீர்கள். அது ஒரு பொருட்டல்ல. உதாரணத்திற்கு நான் உங்களிடம் கூறியிருக்கிறேன், என் வாழ்க்கையில் என் குரு மஹாராஜை பத்து நாட்களுக்கு மேல் பார்த்ததில்லை, ஆனால் நான் அவர் அறிவுரைகளை பின்பற்றினேன். நான் இல்லறத்தில் இருந்தேன், கோயிலில் மாதில் நான் வசிக்கவில்லை. அது நடைமுறைக்குரியது. நான் இல்லறத்தில் இருந்தேன், கோயிலில் மாதில் நான் வசிக்கவில்லை. அது நடைமுறைக்குரியது. குரு மஹாராஜ் கூறினார், "ஆம், அவர் வெளியே வசிப்பதே சிறந்தது. அதுதான் நல்லது, மேலும் கால ஓட்டத்தில் அவர் தேவையானவற்றை செய்வார்.

பக்தர்கள்: ஜே! ஹரிபோல்!

பிரபுபாதர்: அவர் அவ்வாறு கூறினார். அந்த நேரத்தில் அவர் எதை எதிர்பார்க்கிறார் என்று எனக்கு புரியவில்லை. நிச்சயமாக, எனக்குத் தெரியும் அவர் நான் சமயச் சொற்பொழிவாற்றுவதை விரும்புகிறார் என்று.

யசோதானந்தன: நீங்கள் இதை மிக நேர்த்தியான முறையில் செய்துவிட்டீர்கள் என்று நான் நினைக்கிறேன்.

பக்தர்கள்: ஜேய், பிரபுபதா! ஹரிபோல்!

பிரபுபாதர்: ஆம், மிக நேர்த்தியான முறையில் செய்யப்பட்டது, ஏனென்றால் நான் என் குரு மஹாராஜின் அறிவுரைகளை கவனமாக பின்பற்றினேன், அவ்வளவுதான். இல்லையெனில் எனக்கு வல்லமை இல்லை. நான் எந்த மந்திரமும் செய்யவில்லை. நான் செய்தேனா? எதாவது தங்கம் உற்பத்தி செய்வது? (சிரிப்பொலி) இருப்பினும், தங்கம்-உற்பத்தி செய்யும் குருவைவிட எனக்கு சிறந்த சீடர்கள் கிடைத்துள்ளார்கள்.