TA/Prabhupada 0113 - நாக்கை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்



Lecture on SB 5.6.2 -- Vrndavana, November 24, 1976

ஆகையால் ரகுநாத தாஸ கோஸ்வமி கண்டிப்பான முறையை பின்பற்றினார், சைதன்ய மஹாபிரபுவும் கண்டிப்பான முறையை பின்பற்றினார். இன்னும் ரூப-சனாதன கோஸ்வாமி கண்டிப்பான முறையை பின்பற்றினார். ஒருவர் விருந்தாவனத்தில் குறுகிய ஆடை அணிந்து வசித்துக் கொண்டிருப்பதால் அவர் ரூப கோஸ்வாமி போல் ஆவார் என்பதல்ல. ரூப கோஸ்வாமி முழுமையாக ஈடுபட்டிருந்தார். நாநா -ஸாஸ்த்ர-விசாரணைக-நிபுநௌ சத்-தர்ம-சம்ஸ்தாபகெள லோகானாம் ஹித-காரிநௌ. அவர்கள் விருந்தாவனத்தில் இருந்தார்கள், ஆனால் மக்களுக்கு, இந்த பௌதிக உலகத்திற்கு, எவ்வாறு நன்மை செய்வது என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். எவ்வாறு என்றால் ப்ரலாத் மஹராஜாவை போல். ஸொசெ தது விமுக-செதாஸ. சாதுக்களின் கவலை தவறான வழியில் செல்லும் ஜட செயல்களில் ஈடுபட்டவர்களைப் பற்றி சிந்திப்பதாகும். அவர்கள் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள், திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள், எவ்வாறு இவர்களை உயர்த்துவது, அவர்கள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் சாது. லோகானாம் ஹித-காரிநௌ. சாது, அதுவல்ல "நான் என் உடைகளை இம்மாதிரியாக மாற்றி விட்டேன், மேலும் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு எனக்கு ரொட்டி கொடுப்பார்கள், மேலும் நான் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம்." அது சாது அல்ல. சாது.., பகவான் கிருஷ்ணர் கூறுகிறார் யார் சாது என்று. அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமனான்யபாக் ஸாதுரேவ ஸ மந்தவ்ய: (பகவத் கீதை 9.30). அதுதான் சாது. தன் வாழ்க்கை முழுமையும் கிருஷ்ணருக்கு ஆர்ப்பணித்தவர், அவர்தான் சாது. அவருக்கு சில கெட்ட பழக்கங்கள் இருந்தாலும்.., கெட்ட பழக்கங்கள், ஒரு சாதுவிற்கு கெட்ட பழக்கங்கள் இருக்கக் கூடாது, ஏனென்றால் ஒருவர் சாதுவென்றால், ஆரம்பத்தில் அவருக்கு சில கெட்ட பழக்கங்கள் இருந்தால், அது சீர்படுத்தப்படும். ஸஷ்வாத் பாவதி தர்மாத்மா கஷிப்ரம்பாவதி தர்மாத்மா ஸஷ்வாசான்திம் நிகச்சதி. அவர் உண்மையான சாதுவாக இருந்தால், அவருடைய கெட்ட பழக்கங்கள் மிக விரைவாக சீர்படுத்தப்படும். மிக விரைவில், அவர் தீய பழக்கங்களைத் தொடர்ந்து கொண்டு சாதுவாகவும் இருக்க முடியாது. அது நடக்காது. அது சாதுவல்ல. ஒருவேளை அவருடைய கடந்த கால பழக்கத்தினால், அவர் எதாவது தவறுகளில் ஈடுபட்டிருக்கலாம். அது மன்னிக்கப்படலாம். ஆனால் அவர், சாது என்ற பெயரில் முக்தியடைந்தவராக, தொடர்ந்து அபத்தமான காரியங்களை செய்தால், அவர் ஒரு ஏமாற்றுக்காரர். அவர் ஒரு சாதுவல்ல. அபி சேத்ஸுதுராசாரோ. செத், யாதி, எதிர்பாராமல், நடந்தால், அது சாத்தியமே ஆனால் அவர் கிருஷ்ண உணர்வில் ஈர்க்கப்பட்டால், பிறகு கஷிப்ரம்பாவதி தர்மாத்மா ஸஷ்வச்சான்திம் நிகச்சதி. ஆரம்பத்தில் அங்கு சில பிழைகள் இருக்கலாம், ஆனால் நாம் கவனிக்க வேண்டும் அதாவது "என் பிழைகள் தற்போது சரிசெய்யப்பட்டதா?" அது கண்காணிக்கப்பட வேண்டும். மனத்தை நம்பாதீர்கள். அதுதான் இங்குள்ள அறிவுரை. மனம் நம்பப்படக் கூடாது. என் குரு மஹாராஜ் வழக்கமாக அதைக் கூறுவர் "தூக்கத்திலிருந்து விழித்தவுடன், உங்களுடைய காலணியை எடுத்து உங்கள் மனதை நூறு முறை அடியுங்கள். அதுதான் உங்கள் முதல் வேலை. மேலும் படுக்க போகும் போது, துடைப்பக்கட்டையால் உங்கள் மனதை நூறு முறை அடியுங்கள். பிறகு உங்கள் மனதை உங்களால் கட்டுப்படுத்த முடியும். இல்லாவிட்டால் அது மிகவும் கடினமாகும்." ஆகையால் இது..,

இந்த காலணியாலும் துடைப்பக்கட்டையாலும் அடிப்பதும் மற்றொரு வகையான தபஸ்ய. நம்மை போன்ற ஆடவர்களுக்கு, மனதை கட்டுப்படுத்த இயலாது, நாம் இந்த தபஸ்யாவை பயிற்சி செய்ய வேண்டும், மனதை காலணியாலும் துடைப்பக்கட்டையாலும் அடிப்பது. பிறகு அது கட்டுப்படுத்தப்படும். ஒரு ஸ்வாமி என்றால் மனதை கட்டுப்படுத்தக் கூடியவர். வாகொ-வேகம், க்ரோத-வேகம், உதார-வேகம், உபஸ்த-வேகம், மனச-வேகம், க்ரோத-வேகம், ஏதானவேகன் யோ விஷாஹெததீரஹ ப்ரதிவீம்ச ஷிஸ்யாத் (உபதேஷாம்ருதம் 1). இது ரூப கோஸ்வாமியின் அறிவுரை. நம்மால் கட்டுப்படுத்த முடியும் போது வாகோ-வேகம்.., இது க்ரன்டான்-வேகம்.(சிறுப்பு) அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. அவர்களால் கட்டுப்படுத்த முடியாது. ஆகையினால் அவர்கள் குழந்தையாவார்கள். ஒரு குழந்தை மன்னிக்கப்படலாம், ஆனால் ஆன்மீக வாழ்க்கையில் இருக்கும் ஒருவர், அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, பிறகு வெற்றிக்கான வாய்ப்பில்லை. பிறகு அவருக்கு வெற்றிக்கான வாய்ப்பில்லை. இது கட்டுப்படுத்தப்பட வேண்டும். வகொ-வேகம், க்ரோத-வேகம், உதார-வேகம், உபஸ்த-வேகம். ஆனால் மிகவும் முக்கியமான பொருள் யாதெனில் உதார-வேகம், ஜிஹ்வா-வேகம். ஜிஹ்வா-வேகம், இது மிகவும் கட்டுப்பாடுடையது. பக்திவினோத தாகுர கூறியிருக்கிறார், அதாவது "அனைத்து புலன்களும் அங்குள்ளன, ஆனால் அவற்றுள், இந்த ஜிஹ்வா மிகவும் அபாயமானது." தார மதயே ஜிஹ்வா அதி லோபேமோய் சுதுர்மதி தாகே ஜெதா கடின ஸம்ஸாரே. நாக்கை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம்.