TA/Prabhupada 0112 - ஒரு பொருள் அதன் முடிவை வைத்தே மதிப்பிடப்படுகிறது



Television Interview -- July 29, 1971, Gainesville

பேட்டியாளர்: நான் சொன்னது போல் ஐயா, தாங்கள் இந்த நாட்டிற்கு 1965-ல் வந்தீர்கள், தங்களுடைய ஆன்மீக குரு அளித்த அறிவுரைப்படியோ, அல்லது கட்டளைபடியோ. அதுவும் கூட தங்களுடைய ஆன்மீக குரு யார்?

பிரபுபாதர்: என்னுடைய ஆன்மீக குரு ஓம் விஷ்ணுபாத பரமஹம்ச பக்திஸித்தான்த சரஸ்வதீ கோஸ்வாமீ பிரபுபாத.

பேட்டியாளர்: இப்பொழுது இந்த பரம்பரை தொடரில் நாம் முன்பே பேசியதுபோல், இந்த சீடர் பரம்பரை தொடரில் பல காலமாக பின் நோக்கினால், கிருஷ்ணர்வரை பின் நோக்கினால், தங்கள் ஆன்மீக குரு தங்களுக்கு முன்னாளானவரா?

பிரபுபாதர்: ஆம். சீடர் பரம்பரை கிருஷ்ணரிடமிருந்து தொடர்கிறது ஐயாயிரம் ஆண்டுகள் முதற்கொண்டு.

பேட்டியாளர்: தங்கள் ஆன்மீக குரு இன்னும் உயிருடன் இருக்கிறாரா?

பிரபுபாதர்: இல்லை. அவர் 1936-ல் காலமானார்.

பேட்டியாளர்: ஆகையால் இந்த தருணத்தில் தாங்கள் உலகத்தில் இருக்கும் இயக்கத்திற்கு முதல்வர். அது சரிதானே?

பிரபுபாதர்: எனக்கு இன்னும் பல தெய்வசகோதரர்கள் இருக்கிறார்கள், ஆனால் நான் குறிப்பாக இதை ஆரம்பத்திலிருந்து செய்ய உத்தரவிடப்பட்டேன். ஆகையால்தான் என் ஆன்மீக குருவை திருப்திப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

பேட்டியாளர்: இப்போது தாங்கள் இந்த நாட்டிற்கு அனுப்பப்பட்டிருக்கிறீர்கள், ஐக்கிய அமெரிக்காவிற்கு. இது தங்களுடைய நிலப்பகுதி. அது சரிதானே?

பிரபுபாதர்: என்னுடைய நிலப்பகுதி, அவர் என்ன சொன்னார் என்றால், "நீங்கள் சென்று இந்த தத்துவதை அங்கிலம் தெரிந்த போதுமக்களிடம் உரையாடுங்கள்."

பேட்டியாளர்: ஆங்கிலம் பேசும் உலக மக்களிடம்.

பிரபுபாதர்: ஆம். அதிலும் மேற்கத்திய உலகில். ஆம். அவர் என்னிடம் அதைச் சொன்னார்.

பேட்டியாளர்: தாங்கள் வந்த போது, ஐயா, இந்த நாட்டிற்கு 15, 16 வருடங்களுக்கு முன்பு மேலும் ஆரம்பித்த போது,

பிரபுபாதர்: இல்லை, இல்லை, 15, 16 வருடங்கள் அல்ல.

பேட்டியாளர்: ஐந்து, ஆறு வருடங்களுக்கு முன். தங்கள் மன்னிப்பை வேண்டுகிறேன். உலகின் இந்த பகுதியில் தங்களுக்கு தெரிந்தது போல், சமயங்கள் குறைபட்டுள்ள பகுதிக்கு வரவில்லை. ஐக்கிய அமெரிக்காவில் எங்களுக்கு பல மதங்கள் உள்ளன, மேலும் நான் நினைக்கிறேன் இந்த நாட்டின் மக்கள் நம்ப விரும்புகிறார்கள், பெரும்பான்மையாக, அதாவது அவர்கள் மதசார்ந்த மக்கள், தெய்வ நம்பிக்கை உள்ள மக்கள், தங்களை ஒரு சில மதசார்ந்த வடிவத்தின் சொற்தொடரில் தம்மை அர்ப்ணித்து கொள்கிறார்கள். மேலும் தங்களுடைய. சிந்தனை என்னவாக இருக்கும் என்று நான் வியக்கிறேன் ஏற்கனவே வாழ்ந்துக் கொண்டிருக்கும் மதசார்ந்த கருத்துடன் தாங்கள் எதை இணைக்கலாம் என்று நினைக்கிறீர்கள் இந்த நாட்டில், இங்கு வருவதன் மூலம், மேலும் தங்களுடைய சொந்த தத்துவத்தை அதனுடன் இணைக்க?

பிரபுபாதர்: ஆம், நான் உங்கள் நாட்டிற்கு முதலில் வந்தபோது பட்லரில் ஒரு இந்திய நண்பரின் விருந்தாளியாக வந்தேன்.

பேட்டியாளர்: பென்சில்வேனியாவில்.

பிரபுபாதர்: பென்சில்வேனியா. ஆம். அது ஒரு சிறிய நாடாக இருந்த போதிலும், எனக்கு மிகவும் மகிழ்வூட்டியது அங்கே இருந்த பல தேவாலயங்கள்.

பேட்டியாளர்: பல தேவாலயங்கள். ஆமாம். ஆமாம்.

பிரபுபாதர்: ஆம், பல தேவாலயங்கள். மேலும் நான் அங்குள்ள பல தேவாலயங்களில் சொற்பொழிவாற்றினேன். எனக்கு விருந்தளித்தவர் அதற்கான ஏற்பாடுகள் செய்தார். ஆகையால் அந்த நோக்கத்தோடு இங்கு வந்து மதசார்ந்த செயல்களை தோற்கடிக்க வரவில்லை. அது என் குறிக்கோள் அல்ல. எங்களுடைய சமயக்குழு, பகவான் சைதன்யாவின் சமயக்குழு, எல்லோருக்கும் இறைவனிடம் அன்பு செலுத்துவது எப்படி என்று கற்பித்தலாகும், அவ்வளவுதான்.

பேட்டியாளர்: ஆனால் எம்முறையில், ஐயா, நான் கேட்கலாமா, எம்முறையில் நினைத்தீர்கள், இப்போதும் என்ன நினைக்கிறீர்கள், அதாவது இறைவனின் அன்பைப் பற்றி தாங்கள் கற்பிப்பது, செய்து கொண்டிருப்பது வித்தியாசமாகவும் ஒரு வேளை சிறந்ததாகவும் ஏற்கனவே இறைவனின் அன்பைப்பற்றி கற்பித்து இந்த நாட்டில் நடத்திக் கொண்டிருப்பதுடன் மேலும் மேற்கத்திய உலகில் பல நூற்றாண்டுகளாக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது?

பிரபுபாதர்: அது உண்மையே, ஏனென்றால் நாங்கள் பகவான் சைதன்யாவின் காலடிகளை பின்பற்றுகிறோம். அவர் ஆலோசனைக்கும், அவர் எங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்- வேத இலக்கியங்களின் அதிகாரப்படி- அவர் நேரிலேயே வந்த கிருஷ்ணர் ஆவார்.

பேட்டியாளர்: அவர் எந்த பகவான்?

பிரபுபாதர்: பகவான் சைதன்ய.

பேட்டியாளர்: ஓ ஆமாம். அவர்தான் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இந்தியாவிற்கு வந்தார்?

பிரபுபாதர்: ஆம், அவரே கிருஷ்ணர் ஆவார், மேலும் கிருஷ்ணரை எவ்வாறு நேசிப்பது என்று கற்பிக்கிறார். ஆகையினால் அவருடைய செயல்முறைகள் மிகவும் அதிகாரப்பூர்வமானது. உதாரணத்திற்கு நீங்கள் ஸ்தாபனம் நிறுவுவதில் திறமைசாலிகளாக இருப்பது போல். ஒருவர் ஏதோ ஒன்று செய்துக் கொண்டிருக்கின்றார் என்றால், நீங்கள் தனிமனிதராக அவருக்கு கற்பித்து, "இவ்வாறு செய்." என்றால் அது அதிகாரமுடையது. ஆகையால் கடவுளை உணர்தல், கடவுள் தானே கற்பிக்கிறார். எவ்வாறு என்றால் பகவத்-கீதையில் இருப்பது போல், கிருஷ்ணர் பகவான். அவர் தன்னைப் பற்றி தானே பேசுகிறார். மேலும் இறுதியாக அவர் கூறுகிறார், "சும்மா என்னிடம் சரணடையுங்கள். நான் உங்களை பொறுப்பேற்றுக் கொள்கிறேன்," ஆனால் மக்கள் தவறாக புரிந்துக் கொள்கிறார்கள். ஆகையால் பகவான் சைதன்ய - கிருஷ்ணர் மீண்டும் வந்தார், பகவான் சைதன்யாவாக, எவ்வாறு சரணடைவது என்று மக்களுக்கு கற்பிக்க. இன்னும் நாம் பகவான் சைதன்யாவின் காலடிகளை பின்பற்றுவதால், அந்த செயல்முறை மிகவும் உன்னதமானதால் அதாவது வெளிநாட்டவர் கிருஷ்ணரை பற்றி அறியாதவர்கள் கூட சரணடைகிறார்கள். அந்த செயல்முறை மிகவும் சக்திவாய்ந்தது. ஆகையால் அதுதான் என் குறிக்கொள். நாங்கள் சொல்லமாட்டோம் அதாவது "இந்த மதம் அந்த மதத்தைவிட சிறந்தது," அல்லது, "என் செயல்முறை இன்னும் நல்லது." நாங்கள் முடிவுகளை வைத்து பார்க்க விரும்புகிறோம். சமஸ்கிருதத்தில் ஒரு வார்த்தை உள்ளது, பாலேன பரிசீயதே. ஒரு பொருள் அதன் முடிவை வைத்தே மதிப்பிடப்படுகிறது.

பேட்டியாளர்: ஒரு பொருள் மதிப்பிடப்படுவது?

பிரபுபாதர்: அதன் முடிவை வைத்தே.

பேட்டியாளர்: ஓ ஆமாம்.

பிரபுபாதர்: நீங்கள் சொல்லலாம், நான் சொல்லலாம் என் முறை மிகச் சிறந்தது என்று. உங்கள் முறை மிகவும் சிறந்தது என்று நீங்கள் கூறலாம், ஆனால் நாங்கள் முடிவை வைத்தே மதிப்பிடுவோம். அதைத்தான், பாகவத கூறுகிறது அதாவது எந்த மதம் இறைவனின் அன்பை ஏற்றுக் கொள்கிறதோ அந்த மதத்தின் செயல்முறை மிகவும் சிறந்தது.