TA/Prabhupada 0122 - இந்த அயோக்கியர்கள் நினைக்கிறார்கள், "நான் இந்த உடல்"



Morning Walk At Cheviot Hills Golf Course -- May 17, 1973, Los Angeles

பிரபுபாதர்: கிருஷ்ணர் கூறுகிறார், "நீங்கள் முழுமையாக சரணடையுங்கள். நான் உங்களுக்கு முழு பாதுகாப்பு அளிப்பேன்." அஹம் த்வாம் ஸர்வபாபேப்யோ மோக்ஷயிகஷ்யாமி (பகவத் கீதை 18.66). அவர் உங்களுக்கு முழுமையான அறிவாற்றலை கொடுப்பார். (இடைவேளை). அறிவியல் உலகம் எப்போது இதை ஒப்புக்கொள்கிறதோ அப்போதுதான் நமக்கு பெரிய வெற்றியாகும். அவர்கள் வெறுமனே ஒப்புக்கொள்ளட்டும். பிறகு நம் கிருஷ்ண பக்தி இயக்கம் பெரும் வெற்றியடையும். நீங்கள் வெறுமனே ஒத்துக்கொள்ளுங்கள், "ஆம், கடவுள் இருக்கிறார் மேலும் மனித அறிவுக்கு எட்டாத சக்தி இருக்கிறது என்று." பிறகு நம் இயக்கம் பெரிய வெற்றியடையும். மேலும் அதுதான் உண்மையாகும். வெறுமனே முட்டாள்களுக்கு இடையில் அர்த்மற்ற பேச்சுக்களால் ஒன்றும் பெரிய வரவு இல்லை. அந்தா யதாந்தைர் உபனீயமானாஹ (ஸ்ரீமத் பாகவதம் 7.5.31). ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்திச் செல்கிறான். அப்படிப்பட்டதன் முக்கியத்துவம் என்ன? அவர்கள் அனைவரும் குருடர்கள். மேலும் ஒருவர் குருடராகவும் அயோக்கியராகவும் இருக்கும்வரை, அவர் பகவானை ஏற்றுக்கொள்ளமாட்டார். இதுதான் அந்த சோதனை. அவர் பகவானை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாம் பார்த்த உடனடியாக, அவன் குருடன், அயோக்கியன், முட்டாள், எதுவேண்டுமானாலும் நீங்கள் அழைக்கலாம். ஒப்பிட்டுச் சரிபார்க்காது உண்மையென கருதுதல், எவ்வாறெனினும், அவன் எவரானாலும் சரி. அவன் ஒரு அயோக்கியன். இந்த கொள்கையில் நாம் மிகப் பெரிய வேதியியல் வல்லுநர், . த்ததுவஞானி யாராயினும் நம்மிடம் வருபவர்களுக்கு சவால்விடலாம். நாம் கூறுவோம், "நீங்கள் அரக்கன்." மற்றொரு வேதியியல் வல்லுநர் வந்தார், நீங்கள் இங்கு அழைத்து வந்தீர்கள், அந்த இந்தியர்?

ஸ்வரூப தாமோதர: ஹம். சைரி(?)

பிரபுபாதர்: ஆகையால் நான் அவரிடம் கூறினேன் அதாவது "நீங்கள் ஒரு அரக்கன்." ஆனால் அவர் கோபமடையவில்லை. அவர் ஒப்புக்கொண்டார். அவருடைய விவாதங்கள் அனைத்தும் தவரென்று நிருபிக்கப்பட்டது. ஒருவேளை உங்களுக்கு ஞாபகமிருக்கும்.

ஸ்வரூப தாமோதர: ஆம், உண்மையில், அவர் சொல்லிக் கொண்டிருந்தார் அதாவது "கிருஷ்ணர் எனக்கு அனைத்து விதிமுறைகளையும், முயற்சியும், எவ்வாறு பரிசோதனை செய்வது என்றும் கொடுக்கவிலை." அது அப்படி..., அவர் அவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தார்.

பிரபுபாதர்: ஆம். நான் ஏன் உங்களுக்கு கொடுக்க வேண்டும்? நீங்கள் அயோக்கியர்கள், நீங்கள் கிருஷ்ணருக்கு எதிராக இருக்கிறீர்கள், கிருஷ்ணர் ஏன் உங்களுக்கு வசதிகள் கொடுக்க வேண்டும்? நீங்கள் கிருஷ்ணருக்கு எதிராக இருந்து மேலும் உங்களுக்கு வரவு வேண்டும் கிருஷ்ணர் வேண்டாம், என்றால் அது சாத்தியமல்ல. நீங்கள் முதலில் பணிவுள்ளவராக வேண்டும். பிறகு கிருஷ்ணர் உங்களுக்கு அனைத்து வசதிகளையும் கொடுப்பார். எவ்வாறு என்றால் எந்த வேதியியல் வல்லுநர், விஞ்ஞானி, தத்துவஞானியையும் நாம் துணிவுடன் எதிர் நோக்கலாம். ஏன்? கிருஷ்ணரின் வல்லமையை, நாம் நம்புகிறோம் அதாவது "கிருஷ்ணர் அங்கிருக்கிறார். நான் எப்போது அவருடன் உரையாடுகிறேனோ, கிருஷ்ணர் எனக்கு அறிவாற்றல் கொடுப்பார்." இதுதான் அதன் அடிப்படை. மற்றபடி, தகுதிகளிலும், தரத்திலும், அவர்கள் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களுக்கு முன்பு நாம் ஒரு சாதாரண சமய சார்பற்ற மனிதர். ஆனால் நாம் எவ்வாறு அவர்களிடம் சவாலிடுவது? ஏனென்றால் நமக்கு தெரியும். எவ்வாறு என்றால் ஒரு சிறு பிள்ளை, ஒரு பெரிய மனிதரிடம் சவால் விடுகிறான் ஏனென்றால் அவனுக்குத் தெரியும், "என் தந்தை இங்கிருக்கிறார்." அவன் தன் தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவனுக்கு நிச்சயமாக தெரியும் "ஒருவராலும் எனக்கு எதுவும் செய்ய முடியாது."

ஸ்வரூப தாமோதர: ஸ்ரீலா பிரபுபாதா, இதன் கருத்தை நான் நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும், தட் அப்யவலதாம் ஜாதம்.

பிரபுபாதர்: தட் அப்யவலதாம் ஜாதம்.

ஸ்வரூப தாமோதர: தேஷாம் ஆத்மாபிமானினாம், பாலகானாம் அனாஷ்ரித்ய தேஷாம் ஆத்மாபிமானினாம், பாலகானாம் அனாஷ்ரித்ய கோவிந்த-சரண-த்வயம்.

ஸ்வரூப தாமோதர: "இந்த வாழ்க்கையின் மனித இனம் வீணாகிவிடுகிறது யாருக்கென்றால்.."

பிரபுபாதர்: ஆம். "கிருஷ்ண உணர்வை புரிந்துக்கொள்ள முயற்சிக்காதவர்களுக்கு." அவர் வெறுமனே ஒரு மிருகம் போல் இறப்பார். அவ்வளவுதான். எவ்வாறு என்றால் பூனைகளும் நாய்களும் போல், அவர்களும் பிறப்பெடுப்பார்கள், அவை உண்ணும், தூங்கும், மேலும் இனவிருத்தி செய்து பிறகு இறக்கும். மனித வாழ்க்கையும் அவ்வாறே உள்ளது.

ஸ்வரூப தாமோதர: ஜாத என்றால் இனம்? ஜாத?

பிரபுபாதர்: ஜாத. ஜாத என்றால் பிறப்பு. அப்யவலதாம் ஜாதம். ஜாத என்றால் அது பயனற்று போகிறது. பயனில்லை. இந்த மனித இனம் பயனற்று போய்விடும் அவன் கோவிந்த-சரணத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால். கோவிந்தம் ஆதி-புருஷம் தமஹம் பஜாமி. அவர் மனமேற்கும்படி இல்லையென்றால் அதாவது "நான் மூலமான கடவுள் கோவிந்தரை வணங்குகிறேன்," பிறகு அவர் சீரழிகிறார். அவ்வளவுதான். அவர்களுடைய வாழ்க்கை சீரழிகிறது.

ஸ்வரூப தாமோதர: ஆத்மாபிமானினாம் என்றால் அந்த..,

பிரபுபாதர்: ஆத்மா, தேஆத்மா-மானினாம்.

ஸ்வரூப தாமோதர: ஆகையால் அந்த சுய-நம்பிக்கை,

பிரபுபாதர்: "நான் இந்த உடல்." சுயமாக. தன்னைப் பற்றி எந்த தகவலும் இல்லை. இந்த அயோக்கியர்கள், அவர்கள் நினைக்கிறார்கள், "நான் இந்த உடல்." ஆத்மா என்றால் உடல், ஆத்மா என்றால் சுயமாக, ஆத்மா என்றால் மனம். ஆகையால் இந்த ஆத்மாபிமானீ என்றால் வாழ்க்கையின் உடல் சம்பந்தமான கருத்து. பாலக. பாலக என்றால் ஒரு முட்டாள், பிள்ளை, பாலக. ஆத்மாபிமானினாம், பாலகானாம். வாழ்க்கையில் உடல் சம்பந்தமான கருத்துடன் இருப்பவர்கள், பிள்ளைகள், முட்டாள்கள், அல்லது மிருகங்களைப் போலானவர்கள்.

ஸ்வரூப தாமோதர: ஆகையால் நான் இந்த செய்யுளின் வழியாக மறுபிறப்பு கோட்பாட்டைப் பற்றி விவரிக்க திட்டமிடுகிறேன்.

பிரபுபாதர்: ஆம். மறுபிறப்பு. ப்ரமட்பிஹ. ப்ரமட்பிஹ என்றால் மறுபிறப்பு, ஒரு உடலிலிருந்து மறு உடலுக்கு மாறுவது. எவ்வாறு என்றால் நான் இங்கிருக்கிறேன். எனக்கு என்னுடைய இந்த உடல் இருக்கிறது, உடை மறைத்திருக்கிறது. மேலும் நான் இந்தியாவிற்கு செல்லும் போது, இது தேவைப்படாது. ஆகையால் அவர்கள் இந்த உடம்பு அப்படியே வந்திருக்கிறது என்று எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் அல்ல. இங்கு சில நிலைமையால், நான் இந்த உடையை ஏற்றுக்கொண்டேன். மற்றொரு இடத்தில், சில நிலைமையால், நான் வெறுமாதிரி உடை ஏற்றுக்கொள்கிறேன். ஆகையால் நான்தான் முக்கியம், இந்த ஆடை அல்ல. ஆனால் இந்த அயோக்கியர்கள் ஆடையை பற்றிதான் படிக்கிறார்கள். அதைத்தான் ஆத்மாபிமானாம் என்றழைக்கிறார்கள், ஆடையை நினைவில் கொண்டு, உடல். பாலகானாம்.