TA/Prabhupada 0214 - நாம் பக்தர்களாக இருக்கும் வரை இந்த இயக்கத்தை ஒரு உத்வேகத்துடன் தள்ளிக் கொண்டு போய்வி



Room Conversation 1 -- July 6, 1976, Washington, D.C.

பிரபுபாதர்: இந்தியாவில் நமக்கு நிலத்தை வழங்க பலபேர் முன்வந்திருக்கிறார்கள். ஆனால் அதை நிர்வாகம் செய்வதற்கு நம்மிடம் ஆள்பலம் இல்லை. ஸ்வரூப தாமோதரன்: எனக்கும் மணிப்பூரிலிருந்து குலவிதா சிங் என்ற ஆயுட்கால ஆதரவாளரிடமிருந்து ஒரு கடிதம் வந்திருந்தது. இன்றைய இளைஞர்கள் ஆன்மீக சிந்தனையைத் நிராகரிக்கிறார்கள் என்று கவலையை தெரிவித்தார். அதனால் அந்த குறையை தீர்த்து வைக்கும் நோக்கத்துடன் அவர் ஒரு கல்விநிலையத்தை திறக்க... பிரபுபாதர்: இந்த (மங்கலான ஒலி) பயங்கரமான நிலைக்கு அந்த விவேகானந்தர் தான் காரணம். யதோ மத ததோ பத (உங்கள் விருப்பம் எப்படியோ அதுவே இறைவனை அடையும் பாதை) (மங்கலான ஒலி) என்ற கருத்தை முன்வைத்தார். ஸ்வரூப தாமோதரன்: ஆக அவர்கள் இஸ்கான் மையம் ஒன்றை தொடக்கிவைக்க தன் விருப்பத்தை தெரிவித்தவுடன் அவர்... பிரபுபாதர்: அது அவ்வளவு கஷ்டமான காரியம் அல்ல என்று நான் நினைக்கிறேன். மணிப்பூரில் உள்ளவர்கள்... ஸ்வரூப தாமோதரன்: அது அவர்களுக்கு சுலபமான விஷயம் தான், ஏனென்றால்... பிரபுபாதர்: ...வைஷ்ணவர்கள். ஆக அவர்கள் புரிந்துகொண்டால் அது நன்மையளிக்கும். ஸ்வரூப தாமோதரன்: அனைவரும், அரசாங்கத்தினரும் பங்கேற்கிறார்கள். ஆக நமக்கு அவர்கள் நல்ல நிலம், இடம், எல்லாம் கொடுக்க முடியும் என்று எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்கள்,மேலும் ... பிரபுபாதர்: ஓ! அந்த கோவிந்தா ஜி கோவிலைப் பற்றி சொல்கிறார்களோ? ஸ்வரூப தாமோதரன்: கோவிந்தாஜி ஆலயத்தின் பொறுப்பை அரசாங்கம் ஏற்றிருக்கிறது. அதனால் நான் பேசிப் பார்த்தேன், கடிதம் எழுதினேன் ... பிரபுபாதர் : அரசாங்கமா? அவர்களால் நிர்வகிக்க முடியாது. ஸ்வரூப தாமோதரன்: அவர்கள் ஒழுங்காக நிர்வகிக்கவும் இல்லை. பிரபுபாதர்: அவர்களால் முடியாது. ஒரு விஷயம் அரசாங்கத்தின் கையில் போனால், குறிப்பாக இந்தியாவில், அந்த விஷயம் பாழாகிவிடும். அரசாங்கம் என்றாலே திருடர்களும் அயோக்கியர்களும் தான். அவர்களால் எப்படி நிர்வகிக்க முடியும்? அவர்கள் தங்கள் வசம் வருவதை எல்லாம் அப்படியே விழுங்கிவிடுவார்கள். அரசாங்கம் என்றால்… அவர்களால் நிர்வகிக்க முடியாது, அவர்கள் பக்தர்கள் இல்லை... ஆலயங்கள் பக்தர்களின் கையில் இருக்க வேண்டும். ஆக (மங்கலான ஒலி), கூலிக்கு வேலை செய்பவன் என்றால் அவன் பணத்தை எதிர்பார்ப்பான். அவ்வளவு தான். அவர்களால் எப்படி ஒரு ஆலயத்தை நிர்வகிக்க முடியும்? அது சாத்தியமே இல்லை. ஸ்வரூப தாமோதரன்: அது அரசியல் பிரச்சினை ஆகிவிடும். பிரபுபாதர்: அவ்வளவு தான். அல்லவா? ஸ்வரூப தாமோதரன்: அது அரசியல் விவகாரம் ஆகிவிடுகிறது. பிறகு பக்தி வழிபாட்டுக்கே இடம் இல்லாமல் போய்விடும். பிரபுபாதர்: எப்படியோ, அதனால் தான் அரசு அதை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும். நாம், அங்கீகாரம் பெற்ற பக்தர்கள், இஸ்கான். அவர்களுக்கு, உண்மையிலேயே அதை நிர்வாகம் செய்ய விருப்பம் இருந்தால் அப்படித்தான் செய்யவேண்டும். நாம் பக்தர்கள் உதவியுடன், பல மையங்களை நிர்வகித்து வருகிறோம். கூலிக்கு வேலை செய்பவர்களை வைத்து இவை அனைத்தையும் நிர்வாகம் செய்வது சாத்தியம் இல்லை. அது சாத்தியமே இல்லை. பக்தன்: ஆம். அது முடியாது. பிரபுபாதர்: அவர்களால் எப்போதுமே... அவர்கள் செய்யமாட்டார்கள். நாம் பக்தர்களாக இருக்கும் வரை தான் இந்த இயக்கத்தை தீவிரமாக தொடர்ந்து செயல்படுத்த முடியும், இல்லையெனில் இது முடிந்து விடும். இதை வெளியாட்களை வைத்து நடத்த முடியாது. பக்தர்களால் மட்டுமே அது சாத்தியம். அது தான் இரகசியம். பக்தன்: ஒரு பக்தனுக்கு பணத்தாசை காட்ட முடியாது. பிரபுபாதர்: என்ன? பக்தன்: ஒரு பக்தனை விலை கொடுத்து வாங்க முடியாது. பிரபுபாதர்: அது சாத்தியம் அல்ல. பக்தன்: தரையை சுத்தம் செய்பவனை உங்களால் விலை கொடுத்து வாங்க முடியும், ஆனால் ஒரு போதகரை விலை கொடுத்து வாங்க முடியாது. பிரபுபாதர்: இல்லை, அது முடியாது. அது சாத்தியம் அல்ல. எனவே நாம் பக்தர்களாக இருக்கும் வரை, நம் இயக்கம் எந்தத் தடையுமின்றி இயங்கும். பக்தன்: பக்தர்கள் உலகம் முழுவதையும் தம் வசப்படுத்திக் கொள்ள வேண்டும். பிரபுபாதர்: ஆமாம். அது இந்த உலகிற்கே நல்லது. பக்தன்: ஆமாம். பிரபுபாதர்: பக்தர்கள் இந்த உலக நிர்வாகத்தை கையில் எடுத்தால், பின்னர் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. கிருஷ்ணர் அதைத்தான் விரும்புகிறார். அவர் பாண்டவர்கள் அரசாங்க பொறுப்பில் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அதனால் தான் அவர் போரில் பங்கேற்றார். "ஆமாம், நீங்கள் தான் பொறுப்பை... கௌரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு, யுதிஷ்டிர அரசர் ஆகவேண்டும்," என ஆசைப்பட்டார். அதைத்தான் அவர் செய்தார். தரம் ஸம்ஸதாபனார்த்தாய. பரித்ராணாய ஸாதூனாம் வினாஷாய ச துஷ்க்ருதாம் (பகவத் கீதை 4.8). எல்லா நிர்வாகமும் சீராக நடக்கவேண்டும் மற்றும் மக்கள் இறை உணர்வுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்பதைத்தான்அவர் விரும்புகிறார். அப்போது அவர்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும். அது தான் கிருஷ்ணரின் திட்டம். இந்த அயோக்கியர்களின் தவறான வழிநடத்துதலால்... அவர்களுக்கு மனித வாழ்க்கை கிடைத்திருந்தும் அது வீணாகிறது. இதைப்பற்றி தான் நான் பேசிக்கொண்டிருந்தேன், "சுதந்திரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? நாயைப்போல் ஆடுவதா?" வாழ்க்கை பாழாகிவிடும். அவர்கள் தங்கள் வாழ்க்கையைக் கெடுத்து, அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறந்து, இந்த பெரிய, பெரிய கட்டிடங்களை விறைத்துப் பார்ப்பார்கள். அவ்வளவு தான். அடுத்த ஜென்மத்தில் நாயாகப் போகிறவர்களுக்கு இந்தப் பெரிய கட்டிடங்களால் என்ன நன்மை இருக்கப் போகிறது? இந்த உச்சி மாடி கட்டிடங்களை கட்டியவர்கள் அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறப்பார்கள் என வைத்துக்கொண்டால், பிறகு நினைத்துப் பாருங்கள். ஸ்வரூப தாமோதரன்: ஆனால் அடுத்த ஜென்மத்தில் தாங்கள் நாயாகப் போவது அவர்களுக்குத் தெரியாதே. பிரபுபாதர்: அது தான் கஷ்டம். அவர்களுக்கு அது தெரியாது. அது தான் மாயை.