TA/Prabhupada 0247 - உண்மையான மதம் என்றால் பகவானிடம் அன்பு செலுத்துவதாகும்



Lecture on BG 2.9 -- London, August 15, 1973

ஆக பகவத்-கீதையின் இறுதிச்சொல் என்னவென்றால் : ஸர்வ-தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). மேலும் அந்த சிந்தனையிலிருந்து தான் பாகவதம் துவங்குகிறது. ஆகவே, பகவத்-கீதை என்பது ஸ்ரீமத்-பாகவதத்தின் தொடக்கநிலை கல்வி. பாகவதத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், தர்மஹ ப்ரோஜ்ஜித-கைடவஹ அத்ர: "ஆக, இந்த ஸ்ரீமத்-பாகவதத்தில், அனைத்து வகையான ஏமாற்று மதங்களும் நிராகரிக்கப்படுகின்றன, 'ப்ரோஜ்ஜித'." ஆக இதில் அந்த தொடர்பு தெரிகிறது. உண்மையான மதம் என்றால் கடவுளை நேசிப்பது. அதுதான் உண்மையான தர்மம். எனவே பாகவதம் கூறுகிறது, ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6) . “அது தான் சிறந்த மதம்." அதற்கு, இந்த மதத்தையோ அல்லது அந்த மதத்தையோ பின்பற்ற வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்றலாம், இந்து மதமோ, கிறிஸ்துவ மதமோ முகமதிய மதமோ, உங்கள் விருப்பப்படி பின்பற்றலாம். ஆனால் நாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஒரு மாணவர் எம். ஏ பட்டப் பரீட்சையில் தேர்ச்சி பெறுவதைப் போல் தான். "நீ எந்தக் கல்லூரியில் படித்து தேர்ச்சி பெற்றாய்?” என்று யாரும் கேட்பதில்லை. “நீ எம். ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றுள்ளாயா? அப்போது சரி." நீ பட்டதாரியா, முதுநிலை பட்டதாரியா, அவ்வளவுதான் தான் எங்களுக்கு தேவை. அவ்வளவு தான். யாரும், "நீ எந்தக் கல்லூரியில் படித்து, எந்த நாட்டிலிருந்து, எந்த மதத்தைப் பின்பற்றி, எம்.ஏ பரீட்சையில் தேர்ச்சி பெற்றாய்?" என்று விசாரிப்பதில்லை. இல்லை. அதுபோலவே யாரும், "நீ எந்த மதத்தைச் சேர்ந்தவன்?” என்று விசாரிக்கக் கூடாது. கடவுள்மீது அன்பு செலுத்தும் கலையை அவன் கற்றுள்ளானா, என்பதை தான் பார்க்க வேண்டும். அவ்வளவுதான். அதுதான் மதம், அதுதான் தர்மம். ஏனென்றால் தர்மம், அல்லது மதம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்னவென்றால் : ஸர்வ-தரமான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). மதம் என்பது இது தான். பாகவதம் சொல்கிறது. தர்மஹ ப்ரோஜ்ஜித-கைடவஹ அத்ர: "அனைத்து ஏமாற்று வகை மதங்களும் இந்த பாகவதத்திலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன.” 'நிர்மத்சராணாம்' மட்டுமே, அதாவது இறைவனின்மீது பொறாமை கொள்ளாதவர்களுக்காக மட்டுமே... "எதற்காக நான் இறைவனின்மீது அன்பு செலுத்த வேண்டும்? நான் எதற்காக கடவுளை வணங்க வேண்டும்? கடவுளை எதற்காக ஏற்க வேண்டும்?" இப்படி நினைப்பவர்கள் அனைவரும் அரக்கர்கள். உண்மையிலேயே இறைவனின்மீது அன்பு செலுத்த தீவிரமாக இருப்பவர்களுக்காக மட்டுமே, அவர்களுக்காக மட்டுமே தான் இந்த ஸ்ரீமத்-பாகவதம். அஹைதுகி அப்ரதிஹதா யேனாத்மா சம்ப்ரசீததி. எப்போது, கடவுளின்மீது அன்பை செலுத்துவது எப்படி, என்பதை நாம் கற்கிறோமோ அதுதான் நம் வாழ்க்கையின் உண்மையான வெற்றி. அப்பொழுதே உங்கள் உள்ளம் நிறைவடையும். யாம் லப்த்வா சாபரம் லாபம் மன்யதே நாதிகம் ததஹ. உங்களுக்கு கிருஷ்ணர், அதாவது இறைவன் கிடைத்தபிறகு... கிருஷ்ணர் என்றால் இறைவன். உங்களிடம் இறைவனின் மற்றொரு பெயர் இருந்தால், அதுவும் ஏற்கப்படும். ஆனால் இறைவன், முழுமுதற் கடவுள், அந்த பரம புருஷர், அவரைப்பற்றி மற்றுமே தான் பேசுகிறோம். நீங்கள் இவரை அடைந்த பிறகு… ஏனென்றால் நாம் ஒரு நபரை நேசிக்கிறோம். இந்த அன்பு செலுத்தும் மனப்பான்மை இருக்கிறது. அனைவரிடமும் இருக்கிறது. ஆனால் அது தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே கிருஷ்ணர் சொல்கிறார், "நீங்கள் அன்பை வைத்திருக்கும் மற்ற எல்லா விஷயங்களையும் உள்ளத்திலிருந்து வெளியேற்றுங்கள். என்மீது அன்பு செலுத்த முயலுங்கள்." ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் (பகவத் கீதை 18.66). நீங்கள் தற்போது போகும் போக்கில், நீங்கள் காட்டும் அன்பு என்றுமே உங்களுக்குத் திருப்தி அளிக்காது. யேனாத்மா சம்ப்ரசீததி. உங்களுக்கு உண்மையான நிறைவு வேண்டும் என்றால், நீங்கள் கிருஷ்ணரை, அதாவது இறைவனை நேசிக்க வேண்டும். முழு தத்துவமும்..., வேத தத்துவத்தின் சாரமும் இதுதான். எந்த தத்துவத்தை வேண்டுமானாலும் பாருங்கள், சாரம் அதே தான். ஏனென்றால் இறுதியில் நீங்கள் விரும்புவது பரிபூரண மன நிறைவு தான். அதை நீங்கள் இறைவனை நேசித்தால் மட்டுமே அடையலாம். எந்த மதம், அதை பின்பற்றுபவர்களுக்கு, இறைவனை நேசிப்பது எப்படி என்பதை கற்றுத் தருகிறதோ, பயில உதவுகிறதோ, அதுவெ சிறந்த மதம். அது தான் சிறந்த மதம். ஸ வை பும்சாம் பரோ தர்மோ யதோ பக்திஹி... (பகவத் கீதை 18.66). மேலும் அந்த அன்பிற்கு வேறு எந்த ஒரு உள்நோக்கமும் கிடையாது. உதாரணத்திற்கு இந்த பௌதிக உலகில், "நான் உன்னை காதலிக்கிறேன்; நீ என்னை காதலிக்கிறாய்", என்றால் அதற்குப் பின் ஒரு உள்நோக்கம் இருக்கும். Ahaituky apratihatā. Ahaitukī, no motive. Anyābhīlāṣitā-śūnyam அஹைதுகி அப்ரதிஹதா. அஹைதுகி, அதாவது எந்த உள்நோக்கமும் இல்லாமல். அன்யாபிலாஷிதா-சூன்யம் [பக்தி-ரசாம்ருத-சிந்து 1.1.11]. மற்ற எல்லா ஆசைகளையும் பூஜ்யம் ஆக்க வேண்டும். பூஜ்யம். அது பகவத் கீதையில் கற்றுத்தரப் படும்.