TA/Prabhupada 0254 - வேத அறிவு குருவால் விவரிக்கப்படுகிறது



Lecture on BG 2.8 -- London, August 8, 1973

ஆக உண்மையில் நாம் அனைவரும் ஆளுமை வாய்ந்த நபர்கள், அருவமான ஆளுமையற்றவர்கள் அல்ல. கிருஷ்ணரும் கூறுகிறார்... அவர் சொல்வார்: "இந்த வீரர்கள், இந்த அரசர்கள், நீ, நான், என் அன்புக்குரிய அர்ஜுனா, நாம் அனைவருமே கடந்த காலத்தில், இந்த ஜென்மத்திற்கு முன்பும் இல்லாமல் இல்லை. எதிர்காலத்தில் நாம் இல்லாமலும் போகப்போவதில்லை." எனவேதான் கிருஷ்ணரின் இந்தக் குறிப்பிட்ட உபதேசம், அதாவது : "நான், நீ மற்றும் இந்த அரசர்கள், வீரர்கள், இங்கு கூடியிருக்கும் அனைவரும் இந்த ஜென்மத்திற்கு முன்பும் இருந்தோம். இப்போது நாம் இருப்பது போலவே தான், தனித்துவம் வாய்ந்த நபர்களாக; அவர்களும் தனித்துவம் வாய்ந்த நபர்களாக இருந்தார்கள். மேலும் எதிர்காலத்திலும் நாம் தனித்துவம் வாய்ந்த நபர்களாக தொடர்ந்து இருப்போம்". ஆக அருவ, ஆளுமையற்ற கருத்துக்கு இடமே இல்லை. இந்த அருவவாதிகள், பூஜ்ஜியவாதிகள் எல்லாம் அர்த்தமற்ற கருத்துகளை கொண்டவர்கள். எனவே, இங்கு கொள்கை என்னவென்றால், விஷயங்களை உள்ளபடி உண்மையுருவில் புரிந்துகொள்வதற்கு, அர்ஜுனர் அணுகியதைப் போல், கிருஷ்ணரை நாம் அணுக வேண்டும், ஷிஷ்யாஸ் தே (அ)ஹம் (பகவத் கீதை 2.7) "இப்போது நான் உங்கள் சிஷ்யன். நீங்கள் எனக்கு கற்றுக்கொடுங்கள். ஷாதி மாம் ப்ரபன்னம். நான் சரணடைகிறேன். நான் உங்களுடன் சம நிலையில் பேச முயலவில்லை." குருவை ஏற்றுக்கொள்வதென்றால், அவர் எதை சொன்னாலும், நீங்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். இல்லையென்றால் குரு என்று யாரையும் ஏற்காதீர்கள். வீண் பெருமைக்காக குருவை ஏற்காதீர்கள். நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அது தான் 'ப்ரபன்னம்'. தத் வித்தி ப்ரணிபாதேன (பகவத் கீதை 4.34). சரணடைவதால் மட்டுமே உங்களால் புரிந்து கொள்ள முடியும், குருவை வெறும் சோதித்துப் பார்க்கும் மனப்பான்மையுடன் அல்ல. "நான் அவரை சோதிக்துப் பார்க்கிறேன், அவருக்கு எவ்வளவு தெரிகிறது என்று பார்க்கட்டும்." பிறகு குருவை ஏற்று என்ன பயன்? அப்படி கூடாது. எனவே அர்ஜுனர் கூறுகிறார்: "உம்மைத் தவிர, இந்தக் குழப்பமான சூழ்நிலையில் எனக்கு உண்மையிலேயே திருப்திகரமாக வழிகாட்ட வேறு யாராலும் முடியாது." யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம் (பகவத் கீதை 2.8). "எனது புலன்கள் வறண்டு போய்விட்டன". ஏனென்றால் இந்த வெளிப்பார்வைக்கு தென்படும் புலன்கள்... அவை உண்மையான புலன்கள் அல்ல. உண்மையான புலன்கள் இந்த உடலுக்குள் இருக்கின்றன. ஹ்ருஷீகென ஹ்ருஷீகேஷ-ஸேவனம் (சைதன்ய சரிதாம்ருதம் மத்ய லீலை 19.170). நாம் கிருஷ்ணருக்குத் தொண்டு செய்ய வேண்டும், ஹ்ருஷீகேஷ... கிருஷ்ணர் தான் உண்மை, நாம் அந்த உண்மையை உணர வேண்டும். பிறகு நம்மால் கிருஷ்ணருக்கு பணிபுரிய முடியும். ஹ்ருஷீகேன. தத் பரத்வேன நிர்மலம். நம் புலன்கள் புனிதமடையும்போது. இந்த்ரியாணி பராணி ஆஹூர் இந்த்ரியேப்யஹ பரம் மனஹ, மனசஸ் து பரோ புத்திர் (பகவத் கீதை 3.42). இதில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கை தத்துவம் என்றால் எல்லாமே இந்த புலன்கள் தான். ஆனால் உங்கள் சிந்தனை இந்த புலன்களைக் கடந்ததும், நீங்கள் மனதை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பீர்கள். மனம் என்ற தளத்திலிருந்து உயர்ந்ததும், நீங்கள் புத்தியை, அதாவது மெய்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு சிந்திப்பீர்கள். ஞானம் என்னும் தளத்திலிருந்து முன்னேரியவுடன், நீங்கள் ஆன்மீக தளத்திற்கு வருவீர்கள். அது தான் ஆன்மீக வடிவம். அதில் வெவ்வேறு நிலைகளும் வழிமுறைகளும் உள்ளன. இந்த ஜட உடலை அடிப்படையாக கருதும்போது நாம் ப்ரத்யக்ஷ-ஞானத்தை நாடுகிறோம். ப்ரத்யக்ஷ என்றால் ஜட புலன்களால் பெற்ற நேரடி உணர்த்தல் என்று அர்த்தம். ஞானத்தில் வெவ்வேறு நிலைகள் உள்ளன. ப்ரத்யக்ஷ, பரோக்ஷ, அபரோக்ஷ, அதோக்ஷஜ, அப்ராக்ருத. இவை ஞானத்தின் பல்வேறு நிலைகள். ஆக உடலின் அடிப்படையில் பெற்ற ஞானம், அதாவது நேரடி புலக்காட்சி, மெய்ஞானம் ஆகாது. ஆகவே, வெறும் பெயரளவிலான இந்த விஞ்ஞானிகளுக்கு நாம் சவால் விடலாம். அவர்களது அறிவின் அடிப்படையே, உடலை அடிப்படையாகக் கொண்ட வாழ்க்கையின் கருத்து, அதாவது ப்ரத்யக்ஷம், சோதனை முறை அறிவு. சோதனை முறை அறிவு என்றால் ஜடப் புலன்களால் பெற்ற அறிவு. அது தான் சோதனை முறை. ப்ரத்யக்ஷம். எல்லோரும்: "கடவுள் எங்கள் கண்களுக்கு தெரியவில்லையே." என்பார்கள். கடவுள் என்பவர் இந்த ப்ரத்யக்ஷ முறையால், அதாவது நேரடி புலக்காட்சியால் பார்க்கக்கூடிய விஷயம் அல்ல. கடவுளுக்கு அனுபாவ என்று மற்றொரு பெயர் இருக்கிறது. அனுபாவ. எப்படி என்றால், இந்த அறையிலிருந்து சூரியன் நமக்கு நேரடியாக புலப்படவில்லை. ஆனால் சூரியன் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். இது பகல் நேரம். அந்த அறிவு உங்களுக்கு எப்படி கிடைத்தது? உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. ஆனால் வேறு வழியாக உங்களால் உணர முடிகிறது. அது தான் அபரோக்ஷ என்று அழைக்கப்படுகிறது. ப்ரத்யக்ஷ பரோக்ஷ அபரோக்ஷ. இப்படியாக, கிருஷ்ண உணர்வு என்றால் அதோக்ஷஜ மற்றும் அப்ராக்ருத, அதாவது ஜட புலன்களுக்கு அப்பாற்பட்டது. எனவே, பகவத் கீதையில் 'அதோக்ஷஜ', என்று கூறப்பட்டுள்ளது. நேரடி புலக்காட்சி நெருங்க முடியாத விஷயம். ஆக நேரடி புலக்காட்சியால் அறிய முடியாத பட்சத்தில், உங்களால் எப்படி அந்த அனுபாவ என்பதை உணர முடியும்? அது தான் ஷ்ரோத-பந்தா. அதுதான் ஷ்ருதி. நீங்கள் வேதங்களிலிருந்து அறிவைப் பெற வேண்டும். மற்றும் அந்த வேத அறிவோ குருவால் விளக்கப்படும். எனவேதான் ஒருவர், பரம குருவான கிருஷ்ணரிடமோ, அவரது பிரதிநிதியிடமோ அடைக்கலம் நாட வேண்டும். பிறகு இந்த அனைத்துப் பிரச்சனைகளையும், அதாவது அறியாமையையும், நம்மால் போக்க முடியும். யச் சோகம் உச்சோஷணம் இந்த்ரியாணாம் (பகவத் கீதை 2.8).