TA/Prabhupada 0276 -குருவின் வேலை உங்களுக்கு கிருஷ்ணரைக் கொடுப்பது, பௌதிக பலன்களை அல்ல



Lecture on BG 2.7 -- London, August 7, 1973

ஆகையால் இந்த அறிவு தேவைப்படுகிறது, உண்மையயான குருவை எவ்வாறு கண்டுபிடித்து அவரிடம் சரணடைவது. குரு என்றால் தேவைகளை வழங்குவதற்கு ஆதரித்து, வைத்திருப்பது அல்ல. "என் அன்புள்ள குரு, நான் இதனால் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிறேன். தங்ளால் எனக்கு கொஞ்சம் மருந்து கொடுக்க முடியுமா?" "ஆம், ஆம். இந்த மருந்தை எடுத்துக்கொள்." "ஆம்." அந்த குருஅல்ல. நீங்கள் சில நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தால், நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்லுங்கள். சில மருந்து கொடுப்பது குருவின் வேலையல்ல. குருவின் வேலை உங்களுக்கு கிருஷ்ணரைக் கொடுப்பது. கிருஷ்ண சேய் துமார, கிருஷ்ண டீதே பார. ஒரு வைஷ்ணவ குருவிடம் வேண்டுகிறார்: "ஐயா, தாங்கள் கிருஷ்ணர் பக்தர்." "தாங்கள் விரும்பினால் எனக்கு கிருஷ்ணரை தாங்கள் கொடுக்கலாம்." இதுதான் சிஷ்யனின் நிலை. குருவின் வேலை எவ்வாறு உங்களுக்கு கிருஷ்ணரை கொடுப்பது என்பது, எந்த பௌதிக பொருளும் அல்ல. பௌதிக காரியங்களுக்கு, பல நிறுவனங்கள் உள்ளன. ஆனால் உங்களுக்கு கிருஷ்ணர் வேண்டுமென்றால், அப்போது குரு அத்தியாவசியமாகிறார். யாருக்கு குரு தேவைப்படுகிறார்?

தஸ்மாத் குரும் ப்ரபத்யேத
ஜிக்ஞாஸு ஸ்ரேய உத்தமம்
சாப்தே பரே ச நிஷ்ணாதம்
ப்ரஹ்மணி உபசமாஸ்ரயம்
(ஸ்ரீமத் பாகவதம் 11.3.21)

யாருக்கு குரு தேவைப்படுகிறது? குரு ஒரு ஆடம்பர தோற்றமல்ல. "ஓ, எனக்கு ஒரு குரு இருக்கிறார். நான் ஒரு குருவை தோற்றுவிப்பேன்." குரு என்றால், உக்கிரமான ஒருவர். தஸ்மாத் குரும் ப்ரபத்யேத. ஒருவர் குருவை தேடிச் செல்ல வேண்டும். ஏன்? ஞாஸு: ஸ்ரேய உத்தமம். பூரணதை பற்றி துருவியறிய விரும்பும் ஒருவர். குரு அல்ல, ஆடம்பரம் செய்ய. நாம் ஒரு நாயை வளர்ப்பது போல், ஆடம்பரமாக. அதேபோல், நாம் ஒரு குருவை வைத்துக் கொள்வது. அது குருவல்ல. "குரு என் முடிவுக்கு ஏற்ப நடந்துக் கொள்வார்." அவ்வாறு அல்ல. குரு என்றால் உங்களுக்கு கிருஷ்ணரை கொடுக்கக் கூடியவர். அதுதான் குரு. கிருஷ்ண சேய் துமார. ஏனென்றால் கிருஷ்ணர் குரு ஆவார். அது பிரம்ம சம்ஹிதாவில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வேதேஷூ துர்லபம் அதுர்லபம் ஆத்ம-பக்தெள (பிஸ. 5.33). வேதேஷூ துர்லபம். நீங்கள் தேட வேண்டுமென்றால்... வேதம் என்றால் அறிவு என்ற போதிலும், இறுதியான அறிவு கிருஷ்ணரை புரிந்துக் கொள்வதாகும்.


வேதைஷ் ச ஸர்வை ஹமேவ வேத்யம் (பகவத் கீதை 15.15)


இதுதான் அந்த அறிவுரை. ஆகையால் நீங்கள் வேதத்தை சுயேட்சியாக கற்க வேண்டுமென்றால், அங்கே இருக்கிறது, இருகிறார்கள் சில போக்கிரிகள்... அவர்கள் கூறுகிறார்கள்: "எங்களுக்கு வேதம் மட்டுமே புரியும்? வேதத்தில் என்ன புரிந்தது? வேதத்தை எவ்வாறு நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்? ஆகையால் வேதம் கூறுகிறது,


தத் விஞ்ஞானார்தம் ச குருமேவ அபிகச்செத் (மஉ.1.2.12)


ஒரு வேத புத்தகம் எடுப்பதன் மூலம், அல்லது வாங்குவதன் மூலம், நீங்கள் வேதத்தை புரிந்துக் கொள்ள முடியுமா? வேதம் மிகவும் மலிவான பொருள் அல்ல. ஒரு பிராமணனாகாமல், ஒருவராலும் வேதத்தை புரிந்துக் கொள்ளவோ, வேதம் என்னவென்று தெரிந்துக் கொள்ளவோ முடியாது. ஆகையினால், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பிராமணனாகாமல், எவரும் வேதத்தை கற்க அனுமதியில்லை. அவை அனைத்தும் அர்த்தமற்ற சொற்கள். வேதத்தை பற்றி உங்களுக்கு என்ன புரியும்? ஆகையினால் வியாசதேவ, நான்கு வேதங்களையும் தொகுத்த பின்பு, நான்கு வேதங்களையும் பிரித்த பின்பு, அவர் மஹாபாரதத்தை எழுதினார். ஏனென்றால் வேதம், வேதத்தின் கருப்பொருள் மிகவும் கடினமானது.


ஸ்த்ரீ-சூத்ர-த்விஜ-பந்தூனாம் த்ரயீ ந ஸ்ருதி-கோசரா (ஸ்ரீமத் பாகவதம் 1.4.25)


பெண்களுக்கு, சூத்ரர்காளுக்கு, மேலும் த்விஜ-பந்தூகளுக்கு. வேதம் என்ன என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது. ஆகையால் இந்த போக்கிரிகள் த்விஜ-பந்தூவும் சூத்ரர்களும், அவர்கள் வேதம் கற்க விரும்புகிறார்கள். இல்லை, அது சாத்தியமல்ல. ஒருவர் முதலில் பிராமண தகுதியை பெற்றிருக்க வேண்டும்.


சத்யம் ஷமோ தமஸ் திதிக்ஸ்வ ஆர்ஜவம் ஞானம் விக்ஞானமாஸ்திக்யம் ப்ரஹ்மகர்ம ஸ்வபாவஜம் (பகவத் கீதை 18.42)


பிறகு வேதத்தை தொடுங்கள். இல்லையெனில், வேதத்தில் என்ன உங்களுக்கு புரியும்? முட்டாள்தனம். ஆகையால், வேதம் கூறுகிறது


தத் விஞ்ஞானார்தம் ச குருமேவ (மஉ.1.2.12)


வேதத்தை புரிந்துக் கொள்ள நீங்கள் ஒரு குருவை அணுக வேண்டும். மேலும் அந்த வேதம் என்ன?


வேதைஷ்ச ஸர்வைரஹமேவ வேத்யம் (பகவத் கீதை 15.15)


வேதம் என்றால், வேதம் கற்பது என்றால் கிருஷ்ணரைப் புரிந்துக் கொள்வது. மேலும் அவரிடம் சரணடைவது. இதுதான் வேத அறிவு. இங்கே அர்ஜுன் கூறுகிறார் அதாவது: ப்ரபன்னம். "இப்போது நான் தங்களிடம் சரணடைந்து விட்டேன். நான் இனிமேலும் தங்களிடம் எனக்கு பல விஷயங்கள் தெரிந்தது போல், சமத்துவம் பற்றி பேசப் போவதில்லை." அவர் சொன்னது சரியே, ஆனால் அவர் பௌதிக தளத்தில் சிந்திக்கிறார். அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அதாவது


ப்ரதுஷ்யந்தி குலஸ்த்ரிய (பகவத் கீதை 1.40)


எல்லோரும் என்றால்... இது பௌதிக கருத்து. ஆனால் வேத அறிவு ஆன்மீகமானது, உத்தமம்.


தஸ்மாத் குரும் ப்ரபத்யேத ஜிக்ஞாஸு: ஸ்ரேய உத்தமம் (ஸ்ரீமத் பாகவதம் 11.3.21)


இந்த ஸ்ரேய. உத்தமம். யச்ரேய: ஸ்யாத் நிஷ்சிதம். நிலையானது. அதை திருத்துவது என்னும் கேள்விக்கே இடமில்லை. அந்த விதிமுறை, இப்போது கிருஷ்ணரால் கொடுக்கப்படும். ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ. மேலும் இது இடம் பெற்றது.


பஹுனாம் ஜன்மனாமந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே (பகவத் கீதை 7.19)


ஆகையினால் வாழ்க்கை உயர்ந்த, இலக்கை அடைய, ஒருவர் முழுமையாக கிருஷ்ணரிடம், அல்லது அவருடைய பிரதிநிதியிடம் சரணடைய வேண்டும். பிறகு அவருடைய வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும். மிக்க நன்றி.