TA/Prabhupada 0277 - கிருஷ்ணர் உணர்வு என்றால் பலவிதமான அறிவுகளையும் பெற்றிருப்பது



Lecture on BG 7.2 -- San Francisco, September 11, 1968


ஞானம் தே 'ஹம் ஸவிக்ஞான

மிதம் வக்ஷ்யாம்யசேஷத

யக்ஞா த்வா நேஹ பூயோ

ன்யக்ஞா தவ்யமவசிஷ்யதே (பகவத் கீதை 7.2).

நாம் இந்த செயுள்ளை பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தோம், அறிவு என்றால் என்ன என்று. அறிவு என்றால் இந்த பேரண்டம் எவ்வாறு இயங்குகிறது, வேலையின் அழுத்தம் என்ன, அதன் சக்தி என்ன. விஞ்ஞானிகளைப் போல், அவர்கள் வேறுபட்ட சக்திகளைத் தேடுகிறார்கள். எவ்வாறு என்றால் இந்த பூமி நிறையற்றதால் மிதந்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய பிரமாண்டமான பௌதிக உடல் பல மலைகளை கொண்டு, பல கடல்கள், சமுத்திரங்கள், வானளாவிய வீடுகள், நகரங்கள், சிறு நகரங்கள், நாடுகள் - பஞ்சு சுற்றிய குச்சியைப் போல் காற்றில் மிதந்துக் கொண்டிருக்கிறது. ஆகையால் இது எவ்வாறு மிதக்கிறது என்று ஒருவர் புரிந்துக் கொண்டால், அதுதான் அறிவு. ஆகையால் கிருஷ்ணர் உணர்வு என்றால் பலவிதமான அறிவுகளையும் பெற்றிருப்பது. கிருஷ்ணர் உணர்வு மக்கள் பல உணர்ச்சிபூர்வமாக கொண்டு செல்லப்பட்டவர்கள் என பொருள் அல்ல. இல்லை. எங்களுக்கு மெய்யியல், வேதவியல், நெறிமுறைகள், தார்மீகம் அனைத்தும் இருக்கிறது - மனித வாழ்க்கையில் தேவையான தெரிந்துக் கொள்ளப்பட அனைத்தும். ஆகையால் கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "நான் அறிவைப் பற்றி அனைத்தையும் உன்னிடம் பேசுகிறேன்." ஆகையால் இதுதான் கிருஷ்ணர் உணர்வு. ஒரு கிருஷ்ணர் உணர்வு... ஒரு கிருஷ்ணர் உணர்வுடையவர் முட்டாளாக இருக்கக் கூடாது.


பிரபஞ்ச கோள்கிரகம் எவ்வாறு மிதக்கிறது என்று அவன் விவரிக்க வேண்டியிருந்தால், இந்த மானிட உடல் எவ்வாறு சுழல்கிறது, எத்தனை வகையான உயிறினங்கள், அவைகள் எவ்வாறு உருவாகின்றன... இவை அனைத்தும் விஞ்ஞான அறிவாகும். பௌதிகவியல், தாவரவியல், இரசாயனவியல், வானியல், அனைத்தும். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார்,


யக்ஞா த்வா, உங்களுக்கு இந்த அறிவு புரிந்தால், கிருஷ்ணர் உணர்வு, பிறகு நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. அவ்வாறு என்றால் உங்களுக்கு முழுமையான அறிவு உள்ளது. நாம் அறிவைத் தேடி அலைகிறோம், ஆனால் நாம் கிருஷ்ண உணர்வு அறிவோடு இருந்தால், நாம் கிருஷ்ணரை அறிந்திருந்தால், பிறகு அனைத்து அறிவும் உள்ளடங்கும். ஆகையால்


தக்-சக்தி விஷ்ய விவிக்த-ஸ்வரூப விஷயகம் ஞானம்


உங்களுடைய ஆன்மிக நிலையைப் பற்றிய முழு அறிவும், இந்த பௌதிக உலகம், ஆன்மீக உலகம், பகவான், நமக்கிடையே உள்ள உறவு, நேரம், இடம், அனைத்தும் பெறுவீர்கள். தெரிந்துக் கொள்ள வேண்டியது இன்னும் பல உள்ளன, ஆனால் அதன் கொள்கை என்னவென்றால்... பகவான், ஜீவாத்மாக்கள், நேரம், வேலை, மேலும் இந்த பௌதிக சக்தி. இந்த ஐந்தும் தெரிந்துக் கொள்ள வேண்டியவை. அதாவது "பகவான் இல்லை" என்று நீங்கள் நிராகரிக்க முடியாது. பகவான் கட்டுப்படுத்துபவர், பூரணமான கட்டுப்படுத்தாளர். நீங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை என்று சொல்ல முடியாது. அங்கே கட்டுப்படுத்துபவர் இருக்கிறார். மாநிலங்களைப் போல், அங்கு கட்டுப்படுத்துபவர் இல்லை என்று நீங்கள் கூறமுடியாது. அங்கே கட்டுப்படுத்துபவர் இருக்கிறார். ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும், கட்டுப்பாடு அங்கிருக்கிறது, அரசாங்க கட்டுப்பாடு. ஒருவேளை இந்த கடை, இங்கேயும் அரசாங்க கட்டுப்பாடு. நீங்கள் இவ்வாறு தான் கடை கட்ட வேண்டும், நீங்கள் வசிக்க முடியாது. அது குடியிருப்பு பகுதியாக இருந்தால், "அடுப்பங்கரை இவ்வாறு இருக்க வேண்டும்." அங்கு கட்டுப்பாடு உள்ளது. நீங்கள் தெருவில் நடந்தாலும், உங்கள் வண்டியை ஓட்டினாலும், அங்கு கட்டுப்பாடு உள்ளது: "வலது பக்கமாக செல்லவும்." "நிறுத்துங்கள்." என்று எழுதி இருக்கும் இடத்தில் நீங்கள் தாண்ட முடியாது. நீங்கள் நிறுத்தியே ஆக வேண்டும். ஆகையால் ஒவ்வொரு வழியிலும், நீங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்கள். ஆகையால் அங்கே கட்டுப்படுத்துபவர் இருக்கிறார். மேலும் பூரணமாக கட்டுப்படுத்துபவர் கிருஷ்ணர் ஆவார். அங்கே ஒரு கட்டுப்படுத்தாளர் அவருக்கும் மேல் மற்றொரு கட்டுப்படுத்தாளர் இருக்கிறார். இறுதியான கட்டுப்படுத்தாளர் யார் என்று நீங்கள் தேடிக் கொண்டு சென்றால், பிறகு நீங்கள் கிருஷ்ணரைக் காண்பீர்கள்.


சர்வ-காரண-காரணம் (பி.ச. 5.1)


பிரம்ம சம்ஹித உறுதிப்படுத்தியது, ஈஸ்வர: பரம:, பூரணமாக கட்டுப்படுத்துபவர் கிருஷ்ணர் ஆவார்.


ஈஸ்வர: பரம: க்ருஷ்ண (பி.ச. 5.1)


ஈஸ்வர: என்றால் கட்டுப்படுத்துபவர். ஆகையால் நாம் இந்த கட்டுப்படுத்துபவரைப் பற்றிய அறிவைப் பெற வேண்டும், அவர் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்று. (குழந்தை சத்தம் போடுகிறது) அது தொந்தரவாக இருக்கிறது. ஆகையால் ஞானம் விஞ்ஞானம் தே ஸஹிதம். கட்டுப்படுத்துபவரைப் பற்றி தெரிந்துக் கொள்ள மட்டுமல்ல, ஆனால் அவர் எவ்வாறு கட்டுப்படுத்துகிறார் என்பதையும் தெரிந்துக் கொள்ள வேண்டும். கட்டுப்படுத்துபவர் எத்தகைய சக்திகளை பெற்றிருக்கிறார், மேலும் அவர் எவ்வாறு ஒருவராக கட்டுப்படுத்துகிறார் - அதுதான் விஞ்ஞானம். ஆகையால் ஞானம் விஞ்ஞானம் தே நதெ துப்யம் பரபன்னாய அஸிஸத:.