TA/Prabhupada 0386 - கௌராங்கேர த்யுதி பத பொருள்விளக்கம் பாகம் 1



Purport to Bhajahu Re Mana -- The Cooperation of Our Mind

யார தன ஸம்பத, ஸெய் ஜானெ பகதி-ரஸ-ஸார. இது நரோத்தம தாச தாக்குரால் எழுதப்பட்ட இன்னொரு பாடல். இதில் அவர் கூறுகிறார், "பகவான் சைதன்யரின் தாமரை பாதங்களை ஏற்றுக் கொண்டவன், வேறு வார்த்தைகளில், பகவான் சைதன்யரின் இரண்டு திருப்பாதங்களை தனது ஒரே செல்லமாகக் கொண்டவன், பக்தித் தொண்டின் சாரம் என்னவென்பதை அறிந்தவன் ஆவான்." ஸெய் ஜானெ பகதி-ரஸ-ஸார. பக்தித் தொண்டின் பொருள் என்ன, பக்தித் தொண்டின் ஆனந்தம் என்ன, இதையெல்லாம் பகவான் சைதன்யரின் தாமரை பாதங்களை எல்லாமாக ஏற்றுக் கொண்டவனால் புரிந்துகொள்ள முடியும். உண்மையில் பகவான் சைதன்யர், கிருஷ்ணரே தான். அவரே உயிர்வாழிகளுக்கு தானே நேரடியாக வந்து பக்தித் தொண்டைப் பற்றி கற்றுத் தருகிறார். நேரடியாக. ஆகையால் பகவான் சைதன்யரால் வழங்கப்பட்ட பக்தித் தொண்டின் ரசங்களின் கற்பித்தல் உன்னதமானதாகும். அதில் எந்த சந்தேகமும் இருக்கமுடியாது. ஒரு வல்லுநரான ஆச்சாரியாரே தன் சேவகனுக்கு செயல்முறையை கற்றுத் தருகிறார். ஒருவர் ஏதாவது பொறியியல் தொழிலில் வல்லுநராக இருந்து, ஒரு உதவியாளருக்கு தானே கற்றுத் தந்தால், அந்த ஞானம், கற்பித்தல், குறைபாடற்றது. அதுபோலவே, பகவான் கிருஷ்ணரும், ஒரு பக்தனாக தோன்றி தானே நேரடியாக பக்தித் தொண்டை கற்றுத் தருகிறார். ஆகையால், பகவான் கிருஷ்ணரால் வகுக்கப்பட்ட இந்த பாதையே, பக்தித் தொண்டில் பூரணம் அடைவதற்கு மிகவும் சாத்தியமான வழியாகும். ஸெய் ஜானே பகதி ரஸ ஸார. ஸார என்றால் மையப் பொருள். பிறகு அவர் கூறுகிறார், கௌரங்கேர மதுரி-லீலா, யார கர்ணே ப்ரவேஷிலா. இங்கு அவர் பகவான் சைதன்யரின் லீலைகளைப் பற்றி பேசுகிறார். அவர் கூறுவது என்னவென்றால் "பகவான் சைதன்யரின் லீலைகளும் பகவான் கிருஷ்ணரின் லீலைகளைப் போலவே திவ்யமானவை." பகவத்-கீதையில் கூறியுள்ளபடி, யாரொருவன் கிருஷ்ணரின் திவ்யமான தோற்றம், மறைவு, செயல்களை வெறும் புரிந்துகொள்கிறானோ, அவன் இறைவனின் திருநாட்டில் நுழைய தகுதி பெறுகிறான். வெறும் லீலைகள் மற்றும் செயல்களை, அதாவது கிருஷ்ணரின் திவ்யமான செயல்களை புரிந்துகொண்டாலே போதும். அதுபோலவே, பகவான் சைதன்யரின் லீலைகளை கேட்டு உணர்ந்தவன், உடனடியாக இதயத்தின் அசுத்தங்களிலிருந்து முற்றிலும் விடுபடுகிறான். கௌராங்கேர மதுரி-லீலா, யார கர்ணெ ப்ரவேஷிலா. கர்ணே ப்ரவேஷிலா என்றால், ஒருவன் பகவான் சைதன்யரின் உபதேசத்தை கேட்டு உணர்ந்தாலே போதும். கர்ணே என்றால் காதில். உபதேசத்தை தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது. அப்பொழுது தாமதமின்றி ஒருவனின் இதயம் எல்லா பௌதீக அசுத்தங்களிலிருந்தும் விடுபட்டு தூய்மை அடையும். பிறகு அவர் கூறுகிறார்: யேய் கௌராங்கேர நாம லய, தார ஹய ப்ரேமோதய. கடவுளுக்காக எப்படி தன் அன்பை வளர்ப்பது என்பது தான் பக்தர்களின் கவலை. அதற்கு நரோத்தம தாச தாக்குர் பரிந்துரைக்கிறார், யார் ஒருவன் வெறும், ஸ்ரீ-க்ருஷ்ண-சைதன்ய-ப்ரபு-நித்யானந்த என உச்சரிக்கின்றானோ... கௌராங்க என்றால் அவரை சம்பந்தப்பட்ட அனைத்தும் உட்பட. கௌராங்கரைப் பற்றி பேசினாலே, பகவான் நித்தியானந்தர், அத்வைதர், கதாதரர் மற்றும் ஷ்ரீவாசர், இந்த ஐந்து நபர்களை சேர்த்து தான் குறிக்கவேண்டும். ஆக யேய் கௌராங்கேர நாம லய, யார் ஜெபித்தாலும், உடனேயே அவனுள் கடவுளுக்காக அன்பு ஏற்படும். ஏய் கௌராங்கேர நாம லய, தார ஹய ப்ரேமோதய, தாரெ முய் ஜய பலிஹாரி. நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், "நான் அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். ஏனென்றால், அவன் கடவுளுக்காக அன்பை பெற்றிருப்பது நிச்சயம். பிறகு அவர் கூறுகிறார், கௌராங்க-குணேதே ஜுரே, நித்ய-லீலா தாரே ஸ்புரே. சைதன்ய மகாபிரபுவின் திவ்யமான குணங்களை கேட்பதாலே, ஒருவன் மனமுருகி கண்ணீர் வடித்தால், ராதா கிருஷ்ணரின் காதல் ரசத்தில் உள்ள லீலைகளை உடனேயே புரிந்துகொள்வான். நித்ய-லீலா என்றால் லீலைகள், அதாவது அன்பு பரிமாற்றம், ராதா கிருஷ்ணருக்கு இடையே நிகழும் விவகாரங்கள். அது நித்தியமானது. அது தற்காலிகமானதல்ல. நாம் ராதா-கிருஷ்ணரின் அன்பு விவகாரங்களை , லீலைகளை, பௌதீக உலகில் இருக்கும் சாதாரண இளம் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள பரிமாற்றத்தைப் போல் எண்ணக் கூடாது. அதுவெல்லாம் காதலே அல்ல. அது வெறும் காமம் தான், மேலும் அது நித்தியமானதும் அல்ல. அது உடைந்து போவது அதனால் தான். இன்றைக்கு ஒருவர் மேல் எனக்கு காதல் இருந்தால், மறுநாளே அது உடைந்து விடும். ஆனால் ராதா-கிருஷ்ண லீலை அப்படி கிடையாது. அது நித்தியமானது. எனவே அது திவ்யமானது, மற்றும் இது தற்காலிகமானது. ஆக பகவான் சைதன்யரின் லீலைகளில் யாரொருவன் மூழ்கி இருக்கிறானோ, அவனால் ராதா-கிருஷ்ணரின் அன்பு விவக்ரங்களை எளிதாக புரிந்துகொள்ள முடியும். நித்ய-லீலா தாரே ஸ்புரே. ஸெய் யய ராதா-மாதவ, ஸெய் யய வ்ரஜேந்த்ர-ஸுத பாஷ. மேலும் அப்படி செய்வதாலேயே, அவன் கிருஷ்ணரின் திருவீட்டில் நுழைய தகுதி பெறுகிறான். வ்ரஜேந்த்ர-ஸுத. வ்ரஜேந்த்ர-ஸுத என்றால் பிருந்தாவனத்தில் உள்ள நந்த மகாராஜரின் மகன். அடுத்த ஜென்மத்தில் அவன் அங்கு சென்று கிருஷ்ணருடன் உறவாடுவது நிச்சயம்.