TA/Prabhupada 0387 - கௌராங்கேர த்யுதி பத பொருள்விளக்கம் பாகம் 2



Purport to Gaurangera Duti Pada -- Los Angeles, January 6, 1969

கௌராங்கேர ஸங்கி-கணே, நித்ய-ஸித்த பொலி மானெ. பகவான் சைதன்யரின் பக்தத் துணைமையோரை புரிந்துகொண்டவர்கள், சாதாரண கட்டுண்ட ஆத்மாக்கள் அல்ல... அவர்கள் முக்தி பெற்ற ஆத்மாக்கள். நித்ய-ஸித்த பொலே மானி. மூன்று வகையான பக்தர்கள் இருப்பார்கள். ஒரு வகையினர் ஸாதனா-ஸித்த என்றழைக்கப்படுவார்கள். ஸாதனா-ஸித்த என்றால் பக்தித் தொண்டின் கட்டுப்பாட்டு கொள்கைகளை பின்பற்றுவதால், பக்குவம் அடைந்திருக்கும் நபர்கள். இவர்கள் ஸாதனா-ஸித்த என்றழைக்கப்படுவார்கள். மற்றொரு பிரிவினர் க்ருபா-ஸித்த என்றழைக்கப்படுவார்கள். க்ருபா-ஸித்த என்றால், எல்லா கட்டுப்பாடு கொள்கைகளையும் அவன் கண்டிப்பாக கடைப்பிடிக்காமல் இருக்கும் பட்சத்திலும், ஆச்சாரியார் அல்லது ஒரு பக்தர், அல்லது கிருஷ்ணரின் கருணையால், அவன் உற்னத நிலைக்கு உயர்த்தப்படுகிறான். இது பிரத்யேகமான சம்பவம். மற்றொரு வகையான பக்தர்கள் நித்ய-ஸித்த என்றழைக்கப்படுவார்கள். ஸாதனா-ஸித்த மற்றும் கிருபா-ஸித்த என்றவர்கள் பௌதீகத்தால் ஒருகாலத்தில் பாதிக்கப்பட்டவர்கள், மேலும் கட்டுப்பாட்டு கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம், அல்லது ஒரு பக்தர் அல்லது ஆச்சாரியார் அனுகிரகத்தினால், அவர்கள் உன்னத நிலைக்கு உயர்த்தப்பட்டவர்கள். ஆனால் நித்ய-ஸித்த என்றால் அவர்கள் ஒருபோதும் தாழ்வை அடையாதவர்கள். அவர்கள் என்றென்றும் முக்தி பெற்றவர்கள். ஆக பகவான் சைதன்யரின் பக்தத் துணைமையோர், அதாவது அத்வைத பிரபு, ஷ்ரீவாஸர், கதாதரர், நித்யானந்தர், அவர்கள் விஷ்ணு-தத்வ என்றவர்கள். அவர்கள் எல்லாம் முக்தி பெற்றவர்கள். அவர்கள் மற்றும் அல்ல, கோஸவாமிகளும் கூட... மற்றும் பலர் உள்ளனர். அவர்கள் என்றென்றும் முக்தி பெற்றவர்கள். ஆக, பகவான் சைதன்யரின் பக்தத் துணைமையோர், என்றென்றும் முக்தி பெற்றவர்கள் என்பதை யாரொருவன் புரிந்துகொள்கிறானோ... நித்ய-ஸித்த பலே மானி, ஸெய் யய வ்ரஜேந்த்ர ஸுத-பாஸ. உடனேயே அவன் கிருஷ்ணரின் திருநாட்டிற்கு செல்வதற்கு தகுதி பெறுகிறான். மேலும் அவர் கூறுகிறார், கௌட-மண்டல-பூமி, யெபா ஜானி சிந்தாமணி. மேற்கு வங்காளத்தில், பகவான் சைதன்யரின் திருவிளையாடல் நிகழ்ந்த இடத்திற்கு பெயர் தான் கௌர-மண்டலம். நவத்வீபத்தில், பகவான் சைதன்யரின் பிறந்தநாள் அன்று, பகவான் சைதன்யரின் லீலைகள் நடந்த இடங்களுக்கு சென்று, பக்தர்கள் வலம் வருவார்கள். அதுக்கு ஒன்பது நாட்கள் எடுக்கும். ஆக வங்காளத்தின் அந்த பகுதிக்கு கௌட-மண்டலம் எனப் பெயர். ஆக நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், "யாரொருவன், நாட்டின் இந்த பகுதிக்கும் பிருந்தாவனத்திற்கும் இடையே‌ எந்த வித்தியாசமும் இல்லை என்பதை பிரிந்துக் கொள்கிறானோ," தார ஹய வ்ரஜ-பூமி வாஸ, "அது பிருந்தாவனத்திலேயே வாழ்வதற்கு சமமாகும்." பிறகு அவர் கூறுகிறார், கௌர-ப்ரேம ரஸார்ணவே. பகவான் சைதன்யரின் லீலைகள், கிருஷ்ணரின்‌ அன்பு பரிமாற்றத்தின் ஒரு பெருங்கடலைப் போல் தான். ஆக, யாரொருவன் இந்த பெருங்கடலில் முங்கி எழுகின்றானோ, கௌர-ப்ரேம-ரஸார்ணவே, ஸெய் தரங்க யெபா டூபெ. கடலின் அலைகளில் எப்படி நாம் முங்கி, குளித்து, பிறகு நீராடி விளையாடுகிறோமோ அப்படி தான். யாரொருவன் பகவான் சைதன்யரின் கடவுள் நேசத்தின் விநியோகம் எனும் பெருங்கடலின் அலைகளில் முங்கி, நீராடி விளையாடுவதில் இன்பம் உணருகிறானோ, அப்பேர்பட்டவன் உடனடியாக பகவான் கிருஷ்ணரின் நெருங்கிய பக்தன் ஆகிறான். ஸெய் ராதா-மாதவ-அந்தரங்க. அந்தரங்க என்றால் சாதாரண பக்தன் அல்ல. அவர்கள் நெருங்கிய பக்தர்கள். நரோத்தப தாச தாக்குர் கூறுகிறார், க்ருஹெ வா வனேதே டாகே. "பகவான் சைதன்யரின் இயக்கத்தின் அலைகளில் இன்பம் பெறும் பக்தன்," பகவானின் நெருங்கிய பக்தனாக ஆன காரணத்தால்... நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், "அப்பேர்ப்பட்ட பக்தனுக்கு, அவன் துறவறத்தில் இருந்தாலும் சரி இல்லறத்தில் இருந்தாலும் சரி." க்ருஹ. க்ருஹ என்றால் குடும்பஸ்தர். ஆக சைதன்ய மகாபிரபுவின் இயக்கம் ஒருவர் சந்நியாசி ஆகவேண்டும், துறவறத்தை, ஏற்றாக வேண்டும் என கட்டளை இடுவதில்லை, ஆனால் மாயாவாதி சந்நியாசிகள், அருவவாதிகள், சங்கராச்சாரியார், இவர்கள் முதல்படியிலேயே நிபந்தனை விதிப்பார்கள். அதாவது "முதல்படியாக நீ துறவறத்தை ஏற்றாக வேண்டும். அதன் பிறகு ஆன்மீகத்தில் முன்னேறுவதைப் பற்றி பேசுவோம்." ஆக சங்கர சம்பிரதாயத்தில் ஒருவரையும், துறவறத்தை ஏற்றிருந்தால் ஒழிய உண்மையான அருவவாதி என அங்கிகரிப்பதில்லை. ஆனால் இங்கு, இந்த சைதன்யரின் இயக்கத்தில், அப்படி எந்த நிபந்தனையும் கிடையாது. அத்வைத பிரபு, அவர் ஒரு குடும்பஸ்தர். நித்யானந்தர், அவரும் ஒரு குடும்பஸ்தர். கதாதரர், அவர் குடும்பஸ்தர். மற்றும் ஷ்ரீவாஸரும் ஒரு குடும்பஸ்தர். மேலும் சைதன்ய மஹாப்ரபுவும் இரண்டு முறை திருமணம் செய்தார். ஆக அதற்கு தேவையில்லை. நரோத்தம தாச தாக்குர் கூறுகிறார், துறவறத்தில் இருந்தாலும் சரி, இல்லறத்தில் இருந்தாலும் சரி, அது முக்கியம் இல்லை. அவன் வாஸ்தவத்தில் சைதன்யரின் சங்கீர்த்தன இயக்கத்தின் செயல்பாடுகளில் பங்கேற்று, அதை புரிந்துகொண்டால், பக்தி கடலின் அலைகளில் நீராடினால் போதும். அப்பேர்ப்பட்டவன் எந்நேரமும் முக்தி நிலையில் இருப்பான். மேலும் நரோத்தம தாச தாக்குர் அவனுடன் மேலும் மேலும் நெருக்கமாக உறவாட விரும்புகிறார். அது தான் இந்த பாடலின் மையப் பொருள் ஆகும்.