TA/Prabhupada 0768 - முக்தி என்றால் மீண்டும் பௌதீக உடல் ஏற்க வேண்டாம்.



Lecture on BG 8.1 -- Geneva, June 7, 1974

ப்ரபுபாதா : இது தான் க்ருஷ்ண உணர்வின் இருதி கட்டம், என்னவென்றால், அந்த-காலே, மரண சமயத்தில்... வாழ்கையின் இருதியில், அந்த காலே ச மாம், "என்னிடம்," அந்த காலே ச மாம் ஏவ (கீதை 8.5), " நிச்சயமாக," ஸ்மரண, "நினைத்துக் கொண்டு." விக்ரஹ வழிபாட்டின் நோக்கம் இது தான், ராதா க்ருஷ்ணரின் விக்ரஹ வழிபாடு நீண்ட காலம் செய்து வருவதால், இயல்பாகவே உங்களுக்கு ராதா-க்ருஷ்ணரை தங்கள் இதயத்தில் எப்பொழுதும் நினைக்க பழக்கம் அகிவிடும். இந்த பழக்கம் தேவையானது. அந்த காலே ச மாம் ஏவ ஸ்மரண முக்த்வா ( கிதை 8.5 ). இது தான் முக்தி. முக்தி என்றால் மீண்டும் பௌதீக உடல் ஏற்க வேண்டாம். அது தான் முக்தி. நாம் இந்த பௌதீக உடலினால் வசப்பட்டுள்ளோம். இப்பௌதீக உலகில், நாம் ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலிற்கு மாறிக்கொண்டே இருக்கோம், ஆனால் இதில் முக்தியே கிடையாது. இதில் விடுதலையே கிடையாது. முக்தி என்றால்... வெரும் உடல் மாறுவதால் நாம் முக்தி பெருவதில்லை. முக்கன் என்றால் நாம் இந்த உடல் மாறியப்பின் வேரு எந்த ஜடவுடலையும் ஏற்றுக் கொள்வதில்லை, அனால் நாம் நம் சொந்த ஆன்மீக உடலிலேயே இருக்கிரோம். உதாரணமாக, உங்களுக்கு நோய் இருக்கும் பொழுது, காச்சலால் தவிக்கிறிர்கள், ஆனால், காச்சல் மறைந்தப் பின்னும், உங்கள் நிலையான ஆரோக்யமான உடலிலேயே இருக்கிறீர்கள். முக்தி என்றால் உருவமற்றவர் ஆவது இல்லை. இல்லை. அதே உதாரணம் தான்: நீங்கள் காச்சலிலிருந்து தவிக்கிறீர்கள். காச்சலிலிருந்து விடுபடுவது என்றால் உருவமற்றவர் ஆவது இல்லை. நான் எப்படி உருவமற்றவன் ஆக முடியும் ? என் உருவம் இருக்கிறது. ஆனால் என் உடல் மீண்டும் காச்சலால் பாதிக்கப் படுவதில்லை. இதைத் தான் முக்தி என்பாற்கள். ரோக-முக்த, நோயிலிருந்து விடுபடுவது. எனவே இதை முக்த்வா கலேவரம் என்பாற்கள். ஒரு பாம்பு போல் தான். அவை சிலப்போழுது தன் வெளித் தோலை கழற்றி விடுகின்றன. நீங்கள் இதை கண்டது உண்டா ? பக்தர்கள் : ஆம், ஆம். ப்ரபபுபாதா: இருந்தாலும் அது தன் உடலில் தான் இருக்கிரது. அது தன் உடலில் தான் இருக்கிறது. ஆனால் அதன்மேல் வளர்ந்த, அதுடைய வெளி தோல் போய் விடுகிறது. இயர்க்கையின் ஆராய்வில் எல்லா கல்வியும் ஏற்கனவே இருக்கிறது. நாம் பார்க்கிறோம், பாம்பு தன் தோலை கழற்றினாலும், தன் உருவத்திலேயே தான் இருக்கிறது. அதுபோலவே, நாமும்... முக்த்வா கலேவரம் என்றால், இந்த கூடுதலான... இந்த ஆடை போல் தான், இது ஒரு உறை. என்னால் இதை கழற்றி விட முடியும், ஆனால் நான் என் உடலில் தான் இருக்க போகிரேன். இதேபோல், முக்தி என்றால்... என்னிடம் என் அசல் ( ஆன்மீக ) உருவம் ஏற்கனவே இருக்கிறது. இது பௌதீக உறையினால் மூடப் பட்டிருக்கிறது. ஆகயால், எப்பொழுது இந்த பௌதீக உறை ( உடல் ) ஒழிகிறதோ, அதற்குப் பெயர் தான் முக்தி. எப்பொழுது நீங்கள் க்ருஷ்ணரின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வீரோ அப்பொழுது அதை அடையலாம். அப்பொழுது நிங்கள் உருவம்ற்றவர் ஆவதில்லை. உருவம் இருக்கிறது. எப்படி நான் தனிப்பட்ட உருவமோ, க்ருஷ்ணரிடம் சென்றால், க்ருஷ்ணருக்கு அவர் தனிப்பட்ட உருவம் இருக்கிறது, எனக்கும் என் தனிப்பட்ட உருவம் இருக்கும். நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ( கதா உபனிஷத் 2.2.13 ). அவர் தான் எல்லா உயிர்வாழீகளுக்கும் தலைவர். இப்படியாக இதற்குத் தான் முக்தி என்று பெயர். மரண சமயத்தில் க்ருஷ்ணரை நினைத்திருந்தால் அந்த முக்தியை நீங்கள் அடையலாம். இது சாத்தியம். நாம் க்ருஷ்ணரை எப்பொழுதும் நினைக்க பழக்கப்படுத்திக் கொண்டால், இயல்பாகவே, மரண நேரத்தில், இந்த உடலின் இருதி நேரத்தில், க்ருஷ்ணரை, அவர் ரூபத்தை நினைக்கும் பாக்கியம் நமக்கு இருந்தால், நாம் இந்த ஜட உலகிலிருந்து விடுதலை பெருகின்றோம், மீண்டும் இந்த ஜட உடலை ஏற்கத் தேவை இல்லை. இது தான் க்ருஷ்ண உணர்வு. பழக்கம்.