TA/Prabhupada 0769 - கிருஷ்ணருடன் நேர் சம்பந்தம் இருப்பதால் வைஷ்ணவன் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பான்



Lecture on SB 6.1.6-7 -- Honolulu, June 8, 1975

பரீக்ஷித் மஹாராஜா ஒரு வைஷ்ணவர். வைஷ்ணவர் என்றால் பக்தர். ஆகயால் மனிதன் இவ்வாறு தவிப்பிதை அவர் சிறிது அளவும் பொருட்படுத்தவில்லை. அது தான் வைஷ்ணவரின் ஸ்வபாவம். வைஷ்ணவன் தன்னளவில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பான். ஏன் என்றால் அவன் க்ருஷ்ணருடன் நேரடியாக சம்பந்தம் வைத்திருக்கிறான். தன்னளவில் அவனுக்கு ஒரு குறையும் இல்லை, ஏன் என்றால் ஒரு வைஷ்ணவன் க்ருஷ்ணரின் பணியிலேயே த்ருப்தி அடைவான். அவ்வளவு தான். அவனுக்கு வேறு எதுவும் வேண்டாம். சைதன்ய மஹாப்ரபு, குறைந்த பட்சம், இதை சொல்லித் தருகிறார். சைதன்ய மஹாப்ரபு கூறுகிறார், ந தனம், ந ஜனம், ந சுந்தரீம், கவிதாம் வா ஜகத் ஈஷ காமயே (சைதன்ய சரிதம் அந்த்ய லீலை 20.29) தனம் என்றால் செல்வம், மற்றும் ஜனம் என்றால் நிறைய சீடர்கள், உறவினர், பெறிய குடும்பம், அல்லது பெறிய தொழிற்சாலை. பல வணிகர்கள் பெரிய தொழிற்சாலைகளை நடத்தி வருகிறார்கள். மற்றும் ஆயிரக்கணக்கான மனிதர்கள் அவர் ஆணைப்படி உழைக்கிறார்கள். அதுவும் செல்வ வளமை தான். ஏறாளமான பணம் இருப்பதும் செல்வச் செழிப்பு தான். தனம் ஜனம். பிறகு, சிறந்த மனைவி, அழகான சொல் தட்டாத, மகிழ்வளிக்கின்ற மனைவி, அதுவும் ஒரு செல்வம் தான். இவை எல்லாம் பௌதீகத் தேவைகள். சாதாரணமாக மக்கள் இந்த மூன்று விஷயங்களுக்காக ஆசைப் படுவார்கள். செல்வம், நிறைய பின்பற்றுபவர்கள் மற்றும் வீட்டில் ஒரு நல்ல மனைவி. ஆனால் சைதன்ய மகாப்ரபு கூறுகிறார், ந தனம், "எனக்கு பணம் வேண்டாம்." நேர் எதிராக. எல்லொருக்கும் பணத்தின்மேல் விருப்பம். ஆனால் அவர் "எனக்கு பணம் வேண்டாம்" என்கிறார். ந தனம், ந ஜனம்: "என்னைப் பின்பற்றுபவர்களாக ஏறாளமானோர் தேவை இல்லை. எதிர் மாறாகப் பாருங்கள். எல்லோருக்கும் விருப்பம் உண்டு. அரசியல்வாதி, யோகி, ஸ்வாமி எல்லோருக்கும் விருப்பம் உண்டு. "ஆயிரக்கணக்கில் என்னை பின்பற்றுபவர்கள் இருக்கலாம்." ஆனால் சைதன்ய மகாப்ரபு சொல்கிறார் ,"இல்லை, எனக்கு வேண்டாம்". ந தனம் ந ஜனம் ந ஸுந்தரீம் கவிதாம் வா ஜகதீச காமயே. எனக்கு நல்ல அழகான சொல் தட்டாத மனைவியும் வேண்டாம். " பின்னே உனக்கு என்ன தான் வேண்டும் ?" மம ஜன்மனி ஜன்மனிஷ்வரே பவதாத் பக்திர் அஹைதுகீ: எவ்வளவு ஜன்மங்கள் எடுத்தாலும் நான் முழுமுதற்கடவுளான உங்களுடைய திடப் பற்றுடைய தாசனாகவே இருக்கவேண்டும். அவர் தான் வைஷ்ணவர். அவருக்கு எந்தக் குறையும் இல்லை. எதற்காக அவர் ஆசைப் படவேண்டும் ? அவர் க்ருஷ்ணரின் தாசனானால், பிறகு அவருக்கு என்ன வேண்டும் ? ஒரு வேளை நீங்கள் ஒரு மிகப் பெரிய நபரின் தாசனாக ஆனால், பிறகு குறைகளுக்கான கேள்வி எங்கே இருக்கும் ? இது தான் புத்திசாலித்தனம். எந்தப் பெரிய மனிதனுடைய என்த வேலைக்காரனும், தன் எசமானைவிட பெரியவன் ஆவான். ஏன் என்றால் அவனுக்கு எல்லாம் அளிக்கப் படுகிறது... எசமானுக்கு பல உணவு வகைகள் வழங்கப் படுகின்றன. எசமான் துளி எடுத்துக் கொண்ட பின் மீதி அனைத்தையும் வேலைக்காரன் சாப்பிடுவான். ( சிரிப்பு ) அப்போழுது அவனுக்கு என்ன குறை ? குறைகளுக்கு இடமே இல்லை. இறைவனின் தாசன் ஆக முயற்ச்சி செய்து பாருங்கள், பிறகு உங்கள் எல்லா தேவைகளும் தேவையான அளவில் பூர்த்தியாகும். இது தான் புத்திசாலித்தனம். ஒரு பணக்காரனின் மகனைப்போல் தான், அவனுக்கு தந்தையிடமிருந்து என்ன வேண்டும் ? அவனுக்கு வேண்டியது தந்தையும் தாயும் தான். அப்பா, அம்மாவுக்கு தெரியும், அவனுக்கு என்ன தேவை, எப்படி அவன் சந்தோஷம் அடைவான் என்று. அது தான் அப்பா அம்மாவின் கடமை. அது போலவே, இதுவும் அறிவார்ந்தது: க்ருஷ்ணரின் கபடமற்ற தாசன் ஆக முயற்ச்சி செய்வது. உங்கள் வாழ்கையின் எல்லா தேவைகளும் போதுமான அளவில் பூர்த்தி செய்யப்படும். கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆகயால் அறிவுத்திறம் வாய்ந்த பக்தர்கள் கேட்கவே மாட்டார்கள், உதாரணமாக, அறிவு இல்லாத பக்தர்கள் கிறிஸ்தவர் கோயிலுக்குச் சென்று கடவுளிடம் வேண்டுகிறார்கள், "எங்களுக்கு தினசரி ரொட்டியைக் கொடு. " அவன் கடவுளின் தாசன், பிறகு அவனுக்கான ரொட்டிக்கூட கிடைக்காதா என்ன ? கடவுளிடம் கேட்கத் தேவையா ? இல்லை. மற்ற எண்பது லட்சம் ஜீவ ராசீகளுக்கும் கடவுள் உணவு அளிக்கிறார். பறவைகள், மிருகங்கள், புலிகள், யானைகள், இவை எல்லாம் உணவைக் கேட்பதற்கு கோயிலுக்குச் செல்வதில்லை. ஆனாலும் அவர்களுக்கு உணவு கிடைக்கிறது. கடவுள் எல்லோருக்கும் உணவை அளிக்கும் பொழுது, ஏன் உங்களுக்கு மட்டும் அளிக்க மாட்டார் ? அவர் அளிக்கிறார். ஆகையால் நாம் கடவுளிடம் பௌதீக சுகங்களுக்காக பிச்சை கேட்டுப் போகக் கூடாது. அது உண்மையான பக்தி இல்லை. நாம் கடவுளிடம் எப்படி அவரது பணியில் ஈடுபடலாம் என்று பிச்சை கேட்க மட்டுமே செல்ல வேண்டும். அதற்கு தான் பிச்சை கேட்க வேண்டும்: "ஹரே க்ருஷ்ணா," என்றால்... ஹரே என்றால் "ஓ கடவுளின் சக்தியே, மற்றும் க்ருஷ்ணா என்றால், ஓ க்ருஷ்ணா, ஸ்ரீ க்ருஷ்ணா, தயவு செய்து என்னை உன் தொண்டில் ஈடுப் படுத்து." இது தான் ஹரே க்ருஷ்ணா. ஹரே க்ருஷ்ண, ஹரே க்ருஷ்ண, க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே. இது இந்த வேண்டுதல் தான், " ஸ்ரீ க்ருஷ்ணா, ஸ்ரீமதி ராதாராணியே, க்ருஷ்ணரின் சக்தியே, தயவு செய்து என்னை உங்கள் தொண்டில் ஈடு படுத்த வேண்டும்." அவ்வளவு தான். எல்லா வேலையும் முடிந்தது. இது தான் வைஷ்ணவர். ஆகயால் வைஷ்ணவருக்கு எதற்கான தேவையும் இல்லை. அவருக்குத் தெரியும், "எனக்கு எதற்கான தேவையும் இல்லை. என் ஒரே வேலை க்ருஷ்ணருக்குத் தொண்டு செய்வதே." ஆகயால் அவர் எந்த சூழ்நிலையிலும் சந்தோஷமாக இருப்பார்.