TA/Prabhupada 0866 - எல்லாமே ஒருநாள் அழியப்போகிறது, மரங்களும், செடிகளும், எல்லாமே



750520 - Morning Walk - Melbourne

ஹரி-ஷௌரி: ஶ்ரீல பிரபுபாதா, இந்த மானிட உடல் தேவர்களுடன் ஒப்பிட்டால் முக்கிமற்றது என்றால், ஏன, தேவர்களும் இந்த மானிட உடலுக்கு ஆசைப்படுகிறார்கள்?

பிரபுபாதர்: ஆம், ஏனென்றால் கடவுளை மானிட உடலாலேயே மட்டும் தான்உணர முடியும். மேலை நாடுகளையும் இந்தியாவையும் ஒப்பிடுவது போல. இந்தியா, கடவுளை உணர்ந்து கொள்வதற்கு ஒரு விரைவான வாய்ப்பு. சுற்றுச்சூழல் மிகவும் நன்றாக இருக்கிறது. அதனால் இந்த பூமண்டலம் கடவளை உணர்வதற்கு ஏற்றது, சிறந்த இடம் இந்தியா.

ஹரி-ஷௌரி: நம்ம கோயில்களும் அதே சுற்றுச்சூழல் உடையதா?

பிரபுபாதர்: ஓ ஆமாம்.

ஹரி-ஷௌரி: புண்ணிய தலத்தில் இருக்கும் அதே சக்தி இங்கேயும் இருக்கிறதா?

பிரபுபாதர்: ஓ, ஆமாம். நீ இருக்கும் இடத்தில் அதே சக்தியை உருவாக்கலாம்.

பக்தன்: ஶ்ரீல பிரபுபாதா, நேற்று நீங்கள் மழையை பற்றி குறிப்பிட்டீர்கள், மழையால் நல்லவை நடக்கும் என்று, யாகம் செய்தால் நல்ல மழை பெய்யும் என்று. இந்த உலகத்தில் அனைவரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள், அல்லது இந்த நாட்டில் நிறைய பாவப்பட்ட செயல்களை செய்கிறார்கள்.

பிரபுபாதர்: அதனால் தான் குறைந்து விட்டது. நிறைய பாவங்கள் செய்தால், மழை குறைந்துவிடும்.

பக்தன்: அதனால் தான் குறைந்துவிட்டது.

பிரபுபாதர்: ஆம், கடைசியில் மழையே பெய்யாது. இந்த பிரபஞ்சமே அக்னி குண்டம் ஆகிவிடும். அதுதான் அழிவுக்கு முதல் காரணம். எல்லாமே அழிந்துவிடும் - எல்லா மரங்களும், செடிகளும், மிருகங்களும், எல்லாமே. தீ எல்லாவற்றையும் சாம்பலாக்கிவிடும். அப்புறம் மழை வரும், சாம்பல் எல்லாம் மழையில் கறையும், பிரபஞ்சமே அழிந்துவிடும்.

பத்தன்(2): நான் கூட படித்தேன், ஶ்ரீல பிரபுபாதா, மஹாராஜா யுதிஷ்டிரன், ஆண்டப் பொழுது, மழை இரவில் மட்டும் தான் பொழியுமாம், அது உண்மையா?

பிரபுபாதர்: இரவிலா?

பக்தன்(2): மழை இரவில் மட்டும் தான் பொழியும் ஏனென்றால்...

பிரபுபாதர்: இல்லை. யார் சொன்னார் இரவில் என்று?

ஸ்ருதகீர்த்தி: கிருஷ்ணா புத்தகத்தில் இரவில் தான் மழை பெய்யும் என்று குறிப்பிடப்பட்டிருக்கு.

பத்தன்(2): காலை பொழுதில் அவரவர் வேலைகளை தடையில்லாமல் செய்வதற்காக.

பிரபுபாதர்: ஆம், அப்படித்தான் இருந்தது. இரவில் மழை பெய்தால், பகலில் சூரிய வெளிச்சம் இருக்கும், அப்பொழுது நிலம் செழுமையாக இருக்கும் பயிரிடலாம். ஆமாம். பெங்காலியில் கூறுவார்கள், தினே ஜல் ராத்ரே தாரா செய் ஜன்மே சுக தாரா(?) காலை பொழுதில் அடை மழை பெய்து, இரவில் நக்ஷ்சத்திரம் பார்த்தால், மழை பற்றாக்குறை வரும் என்று தெரிந்துக் கொள்ள வேண்டும். மழையும், தாணியமும் பற்றாக்குறை ஆகிவிடும். சிறந்தது என்னவென்றால் இரவில் அடை மழையும், பகலில் சுட்டெறிக்கும் வெயிலும்தான். அப்பொழுதுதான் நிலம் வளமோடு இருக்கும்.