TA/Prabhupada 0867 - நாம் நித்தியமானவர்கள் நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு. அது தான் சிறந்த அறிவு



750520 - Morning Walk - Melbourne

ஹரி-ஷௌரி: அப்போ இந்த முறையற்ற வானிலையின் காரணம்...

பிரபுபாதர்: இந்த பாவச்செயல்கள் நிறைந்த வாழ்க்கை, முறை தவறிய வாழ்க்கை தான்.

ஹரி-ஷௌரி: நாம் இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தை அதிகரித்தால்...

பிரபுபாதர்: வழக்கமாக ஆகிவிடும். இதுதான் இயற்கையின் தண்டனை. பாவச்செயல்கள் பற்றி நீங்கள் கவலைப்படாமல் இருக்கலாம், ஆனால் அது பதிவு செய்யப்படுகிறது. அது முட்டாள்தனம். "நான் கடவுளை மதிக்க மாட்டேன், எது நடக்கப் போகிறதோ அதைப்பற்றி கவலை இல்லை," என்றால்அது வெறும் முட்டாள்தனமே. தாழ்ந்த கிரகங்களில் வாழும் மக்கள் அப்படித்தான் இருப்பார்கள். இந்த கிரகத்திலும். மேலே நாடுகளிலும் நிறைய இடங்களில் "நான் எதற்காகவும் கவலைப்டுவதில்லை என்கிறார்கள், எவ்வளவு பாவப்பட்ட வாழ்க்கை, என்ன நடக்கப்போகிறது. நாம் சந்தோஷமாக இருப்போம் அவ்வளவுதான்." அதுதான் அவர்களது தத்துவம். "நாம் சந்தோஷமாக இருப்போம், அவ்வளவுதான்." ஜட விஷயமாக யோசித்தால் அப்படித்தான். அவர்களுக்கு தெரிவதில்லை நாம் நித்தியமானவர்கள், நமது செயல்களுக்கு நாமே பொறுப்பு என்று. அது தான் அறிவு. ஆனால் அவர்களுக்கு அந்த அறிவே இல்லை. அற்ப சந்தோஷத்திற்கு ஆசைப்படுகிறார்கள். அவர்கள் சாவிற்கு கூட பயப்படுவதில்லை. புலன்களை திருப்திப்படுத்த வேண்டும் அவ்வளவுதான். அதுதான் தானவ, தானவ வாழ்க்கை. விஞ்ஞானிகள் நிறைய வகைகள் இருக்கிறது என்று கருதுகிறார்கள். அதை ஒப்புக்கொள்கிறார்கள். வாழ்க்கை முறையில் ஏன் இவ்வளவு வகைகள் இருக்கிறது?

ஹரி-ஷௌரி: அவர்கள் தோராயமாக சொல்கிறார்கள். அவர்கள் புதைபடிவங்களை ஆராய்ந்து மற்றும் சமீபத்திய கண்டுப் பிடிப்புகளையும் வைத்து சொல்கிறார்கள்.

பிரபுபாதர்: அது பரவாயில்லை.

ஹரிஷௌரி: அவர்கள் ஒரு கணக்கு போட்டார்கள்.

பிரபுபாதர்: ஏன் இவ்வளவு வகைகள் என்று கண்டுபிடிக்கவா?

அமோஹா: முதன்முதலில் அது ஒரு உயிரணுவாக இருந்தது, பின்னர் சுற்றுச்சூழல் காரணமாக ஒரு வகை அழிந்து மற்றொன்று வாழ்ந்தது. எல்லா வகைகளும் விதவிதமான சுற்றுசூழலுக்கு பதப்படுத்திக்கொண்டது.

பிரபுபாதர்: யார் இதற்கு காரணம்? இதை யார் கவனித்துக் கொண்டார்கள்?

அமோஹா: அவர்கள் தானாகவே.. தற்செயலாக.

பிரபுபாதர்: ஆங், எதுவும் தானாக நடைபெறாது. அப்படி நினைப்பது முட்டாள்தனமே. அது முட்டாள்தனமே. ஏதாவது ஒரு ஏற்பாடு இருக்கும். எது தற்செயலாக நடக்கிறது? நீங்கள் ஏன் மரங்களை பராமரிக்கிறீர்கள்? நிறைய விஷயங்கள். எதுவுமே தற்செயலாக நடப்பதில்லை. அதனுடைய காரணம் உங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. தற்செயலாக ஒருவன் பணக்காரன் ஆகலாமே, ஏன் செல்வந்தன் ஆவதற்கு பாடுபடவேண்டும்? காலையும் மாலையும் மோட்டர்கார்கள் ஏன் இங்கேயும் அங்கேயும் பறக்கிறது? ஏன் சம்பாதிக்க முயற்சி செய்கிறீர்கள்? தற்செயலாக பணம் வருமே, உட்கார்ந்து கொள்ளளாமே? ஏன் அப்படி செய்வதில்லை? தற்செயல் என்று ஒன்று இருந்தால், தற்செயலாக வருவதற்கு காத்திருப்போம், பணக்காரன் ஆவோம் என்றால் நடக்குமா? ஏன் முயற்சி செய்ய வேண்டும்? படிக்க ஏன் காலேஜ் போக வேண்டும்? தற்செயலாக எம் .ஏ, பிஹெச்.டி ஆகிவிடலாமே. இது எல்லாம் முட்டாள்தனமே, கீழ்தரமான சிந்தனை. கீழ்தரமான சிந்தனை. எல்லாமே தற்செயலாக நடக்கும் என்றால், அதற்காக ஏன் முயற்சிக்க வேண்டும். இதற்கு என்ன பதில்?

அமோஹா: ஆம், நாம் முயற்சிக்க வேண்டும்-முயற்சிக்கத்தான் வேண்டும்-ஆனால் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. நாம் முயற்சிக்கும் தருணத்தில் நடந்து விட்டால் அதுவே தற்செயலாகிவிடுகிறது. எப்படி பள்ளியில் இருக்கும் போது முயற்சிக்கிறோமோ, நாம் பாஸ் ஆவதற்கு அதுபோல.

பிரபுபாதர்: இல்லை, உனக்கு தற்செயல்களில் நம்பிக்கை இருந்தால், அப்பொழுது நீ எதற்காகவும் பாடுபடக்கூடாது. எதுவுமே தற்செயலாக நடக்காது.

ஹரி-சௌரி: சரி, அப்போ நாம் மனிதனின் செயல்களால் தான் எல்லாமே நடக்கிறது என்று சொல்லலாமா? என்னிடம் எனக்கு தெரிந்த ஒருவரின் கடிதம் இருக்கிறது, அதில்...

பிரபுபாதர்: நமது செயல்கள் மற்றும் கடவுளின் அருள்-இவ்விரண்டுமே. ஐந்து காரணங்கள் உண்டு: செயல், இடம், செயல் செய்வதற்கான சக்தி, எல்லாவற்றையும் விட, கடவுளின் அருள். நாம் நினைப்பது நிறைவேறும். இதில் தற்செயல் என்ற பொருளுக்கு இடமில்லை.