TA/Prabhupada 1073 - பௌதிக இயற்கையை இறைவனாக நினைக்கும் மனப்போக்கை கைவிடாமல் இருக்கும்வரை



660219-20 - Lecture BG Introduction - New York

பௌதிக இயற்கையை இறைவனாக நினைக்கும் மனப்போக்கை கைவிடாமல் இருக்கும்வரை பகவத்-கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தில், இந்த ஜட உலகின் உண்மையான சித்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்டிருக்கிறது அதாவது ஊர்த்வமூலமத: ஷாகம் அஷ்வத்தம் ப்ராஹுரவ்யயம் சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத ஸ வேதவித் (ப.கீ. 15.1). இந்த ஜட உலகம் பதினைந்தாம் அத்தியாயத்தில் வர்ணிக்கப்பட்டிருக்கிறது ஒரு மரம் அதன் வேர்களை மேல் நோக்கி கொண்டுள்ளது போல், ஊர்த்வமூலம். வேர்கள் மேற்புறமாக இருக்கும் மரத்தைப் பார்த்த அனுபவம் உங்களுக்கு உண்டா? எங்களுக்கு இதுபோன்ற மரத்தைப் பார்த்த அனுபவம் உண்டு, பிரதிபலிப்பினால் வேர்கள் மேல் நோக்கி இருக்கும். நாம் நதிக் கரையிலோ அல்லது ஏதோவொரு நீர்த்தேக்கக் கரையிலோ நின்றால், நம்மால் பார்க்க முடியும் நீர்த்தேக்க கரையிலே இருக்கும் பிரதிபலிக்கும் மரங்கள் தலைகீழாக, கிளைகள் கீழேயும் வேர்கள் மேல் நோக்கியும் தோன்றுகின்றன. ஆகையால் இந்த பௌதிக உலகம் நடைமுறையில் ஆன்மீக உலகின் பிரதிபலிப்பேயாகும். எவ்வாறு என்றால் நீர்த்தேக்க கரையில் இருக்கும் மரத்தின் பிரதிபலிப்பு நீரில் தலைகீழாக தெரிவது போல், அதேபோல், இந்த பௌதிக உலகம், நிழல் என்று அழைக்கப்படுகிறது. நிழல். நிழலில் எந்த உண்மையும் இருக்காது, ஆனால் அதே நேரத்தில் நிழலிலிருந்து உண்மையான பொருள் இருக்கிறது என்பதை நாம் புரிந்துக் கொள்ள முடிகிறது. நிழலின் ஒரு உதாரணம், நீரின் நிழல் பாலைவனத்தில், பாலைவனத்தில் நீர் கிடையாது என்பது கருத்து, ஆனால் அங்கே நீர் இருக்கிறது. அதேபோல், ஆன்மீக உலகின், அல்லது பௌதிக உலகின் பிரதிபலிப்பில், சந்தேகமின்றி, அங்கே சந்தோஷமில்லை, நீர் இல்லை. ஆனால் உண்மையான நீர், அல்லது உண்மையான சந்தோஷம், ஆன்மீக உலகில் உள்ளது. ஒருவர் ஆன்மீக உலகை பின்வரும் முறையில் அடைய வேண்டும் என்று பகவான் உணர்த்துகிறார், நிர்மான-மோஹா. நிர்மான-மோஹா ஜித ஸங்க தோஷா அத்யாத்மநித்யா வினிவ்ருத்த காமா: த்வந்த்வைர் விமுக்தா: ஸுகது:க ஸஞ்ஜ்ஞைர் கச்சந்த்யமூடா பதமவ்யயம் தத். (ப.கீ. 15.5). அந்த பதமவ்யயம், அல்லது நித்தியமான ராஜ்யம், நிர்மான-மோஹாவான ஒருவரால் அடையப்படுகிறது. நிர்மான-மோஹா. நிர்மான என்றால் நாம் நியமனங்களைப் பற்றிக் கொண்டிருக்கிறோம். செயற்கையான நியமனங்களை நாம் வேண்டுகிறோம். யாரோ ஒருவர் பிரபுவாக விரும்புகிறார், ஒருவர் பகவானாக விரும்புகிறார், யாரோ ஒருவர் ஜனாதிபதியாக விரும்புகிறார், அல்லது யாரோ ஒருவர் பணக்காரராகவும், மற்றொருவர் வேறு ஏதாகிலும், ராஜாவாக விரும்புகிறார். இந்த நியமனங்கள் அனைத்தும், இந்த நியமனங்களை நாம் பற்றிக் கொண்டு இருக்கும் வரை, ஏனென்றால் இந்த நியமனங்கள் நம் உடலைச் சார்ந்தது, ஆனால் நாம் இந்த உடலல்ல. இதை உணர்வதே ஆன்மீகத்தின் முதல் படி. ஆகையால் ஒருவருக்கும் நியமனங்களில் ஈர்ப்பு இல்லை. மேலும் ஜித்த-சங்க-தொஸா, சங்க-தொஸா. இப்பொழுது நாம் மூன்று விதமான பௌதிக தன்மைகளுடன் தோழமை கொள்கிறோம், மேலும் நாம் பகவானின் பக்திமயமான தொண்டிலிருந்து விலகிச் சென்றால், நாம் பகவானுக்கு செய்யும் தொண்டில் பற்றுக் கொள்ளாதவரை, பௌதிக இயற்கையின் மூன்று குணங்களிலிருந்து நாம் விடுபட முடியாது. ஆகையினால் பகவான் கூறுகிறார், வினிவ்ருத்த காமா:, இந்த நியமனங்களும், அல்லது இந்த பற்றுக்கும் காரணம் நமது காமமும், ஆசையுமாகும். நாம் பௌதிக இயற்கையை ஆட்சி செய்ய விரும்புகிறோம். இயற்கையின் பகவானக நினைக்கும் இந்த எண்ணத்தைக் கைவிடும்வரை, அந்த நேரம் வரை நித்தியமான ரஜ்ஜியத்திற்குப் போகும் வாய்ப்பு சாத்தியம் இல்லை, சநாதன-தாம. த்வந்த்வைர் விமுக்தா: ஸுகது:க ஸஞ்ஜ்ஜைர் கச்சந்த்யமூடா பதமவ்யயம் தத். (ப.கீ. 15.5). அந்த நித்தியமான ராஜ்யம், இந்த பௌதிக உலகத்தைப் போல் அல்லாது அழிவற்ற நிரந்திரமானது, அமூதாஹால் அணுக முடியும். அமூதாஹா என்றால் தடுமாற்றமற்ற, இந்த பொய்யான இன்பங்களால் கவரப்பட்டு தடுமாற்றம் அடையாத ஒருவர். மேலும் பகவானின் நித்தியமான சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒருவர், அவர்தான் பகவானின் நித்தியமான ராஜ்யத்தை சென்றடையும் தகுதி பெற்றவர். அந்த நித்தியமான ராஜ்யத்திற்கு சூரியன், சந்திரன், அல்லது மின்சாரம் எதுவும் தேவையில்லை. இது நித்தியமான ராஜ்ஜியத்தை அடைய சிந்திக்க கொடுக்கப்படும் ஒரு கண்ணோட்டம்.