TA/Prabhupada 0216 - கிருஷ்ணர் முதல் தரமானவர். அவரது பக்தர்களும் முதல் தரமானவர்கள்



Lecture on SB 1.7.47-48 -- Vrndavana, October 6, 1976

இது தான் வைஷ்ணவனின் மனப்பான்மை. வைஷ்ணவன் என்பவன் பர-துக்க-துக்கி அது தான் வைஷ்ணவனின் குணாதிசயம். அவனுக்குத் தன் தனிப்பட்ட துயரத்தைப் பற்றிக் கவலை கிடையாது. ஆனால் அதே வைஷ்ணவன், அடுத்தவர் வேதனைப் படும்போது, துவண்டு போகிறான், துயரப்படுகிறான். அவனே உண்மையான வைஷ்ணவன். பிரஹலாத மகாராஜர் கூறினார், நைவோத்விஜே பர துரத்யாய-வைதரண்யாஸ் த்வத்-வீர்ய-காயன-மஹாம்ருத-மக்ன-சித்தஹ. ஷோசே ததோ விமுக-சேதஸ இந்திரியார்த்த-மாயா-ஸுகாய பரம் உத்வஹதோ விமூடான் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.43) பிரஹலாத மகாராஜர் தன் தந்தையால் பல கொடுமைகளுக்கு ஆளானார். அதனால் அவர் தந்தை வதம் செய்யப்பட்டார். அப்படி இருந்தும், பகவான் நரசிம்ஹ தேவர் அவரை ஏதேனும் வரம் கேட்க வேண்டியபோது, அவர் அதை ஏற்க மறுத்தார். அவர் ஸ வை வணிக் என்றார். என் நாதா, நாங்கள் ரஜோ-குணமும், தமோ-குணமும் நிறைந்த குடும்பத்தில் பிறந்தவர்கள். ரஜோ-குணம், தமோ-குணம். அசுரர்கள், இந்த இரண்டு கீழ்த்தர குணங்களால் பாதிக்கப்படுகின்றனர், ரஜோ-குணம் மற்றும் தமோ-குணம். மேலும் தேவர்கள் சத்வ-குணத்திற்குப் பணிந்தவர்கள். இந்த பௌதிக உலகில் மூன்று குணங்கள் உள்ளன. ஸத்வ-குணம்... த்ரி-குணமயீ. தைவீ ஹி ஏஷா குணமயீ (பகவத் கீதை 7.14). குணமயீ, த்ரிகுணமயீ. இந்த சத்வ, ரஜோ, தமோ குணங்கள் தான் இந்த பௌதிக உலகம். ஆக, சத்வ குணத்தினால் கட்டுப்பட்டவர்கள் முதல் தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது இந்த பௌதிக உலகில் சிறந்தவர்கள். ஆன்மீக உலகில் அல்ல. ஆன்மீக உலகம் மாறுபட்டது. அதற்கு நிர்குண எனப் பெயர், அதாவது பௌதிகத் தன்மைகள் அற்றது. முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. அதில் அனைவரும் முதல் தரத்தினரே. கிருஷ்ணர் சிறந்தவர், அவரது பக்தர்களும் சிறந்தவர்கள். மரங்கள் சிறந்தவர்கள், பறவைகள் சிறந்தவர், பசுக்கள் சிறந்தவர்கள், குன்றுகளும் சிறந்தவர்கள். எனவேதான் அது பூரணத்துவம் வாய்ந்தது அதாவது சார்காட்சியற்றது. இரண்டாம் தரம், மூன்றாம் தரம், நான்காம் தரம், இப்படி ஒப்பிட்டு பார்க்கும் சார்காட்சி கொண்ட எந்த கருத்தும் கிடையாது. எல்லாமே முதல் தரம் தான். அனந்த-சின்மய-ரஸ-ப்ரதிபாவிதாபிஹி (பிரஹ்ம சம்ஹிதா 5.37) அனைத்தும் ஆனந்த-சின்மய-ரசத்தின் கலவை தான். எந்தப் பாகுபாடும் கிடையாது. ஒருவர் தாஸ்ய ரசத்தில் இருந்தாலும் சரி, அல்லது சாக்கிய ரசத்தில் இருந்தாலும் சரி, வாத்சல்ய ரசத்திலோ மாதுர்ய ரசத்திலோ இருந்தாலும் சரி, சமமாகவே கருதப்படுவார். அங்கு ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. ஆனால் அதே நேரத்தில் அது பன்னிறங்கள் கொண்டது. எனக்கு இந்த ரசத்தில் விருப்பம், உனக்கு அந்த ரசத்தில் விருப்பம், என அந்த வேற்றுமைக்கு அனுமதி உண்டு. ஆக இந்த பௌதிக உலகில், அவர்கள் மூன்று குணங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். மற்றும் பிரஹலாத மகாராஜர், ஹிரண்யகஷிபுவின் மகனாக இருந்ததால், தான் ரஜோ மற்றும் தமோ குணங்களின் தாக்கத்தில் இருப்பதாக எண்ணினார். அவர் வைஷ்ணவர் என்பதால், மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டவர். ஆனால் ஒரு வைஷ்ணவர் தனது இந்த நிலையைப் பற்றி எப்போதும் பெருமை கொள்வதில்லை. தான் மிகவும் பக்குவ நிலையை அடைந்தவன் என்றோ பெரிய ஞானி என்றோ எண்ணுவதில்லை. அவர், "நான் தான் மிகவும் தாழ்ந்தவன்," என்று நினைக்கிறார். த்ருணாத் அபி ஷுனீசேன தரோர் அபி ஸஹிஷ்னுனா அமானினா மானதேன கீர்த்தனீயஹ ஸதா ஹரிஹி (சைதன்ய சரிதாம்ருதம் 17.31) இது தான் வைஷ்ணவன்.